முஸ்லிம் விவாக சட்டத்தை திருத்த அமைச்சரவை அங்கீகாரம் | தினகரன்


முஸ்லிம் விவாக சட்டத்தை திருத்த அமைச்சரவை அங்கீகாரம்

முஸ்லிம்களின் திருமணம் செய்யப்பட வேண்டிய வயது, பதிவு செய்யும் நடைமுறை உள்ளிட்ட விடயங்களில் திருத்தத்தை மேற்கொள்வது தொடர்பில், முன்வைக்கப்பட்ட  கூட்டு யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

இலங்கை முஸ்லிம்களின் திருமணம் மற்றும் விவாகரத்தை பதிவு செய்தல் தொடர்பில் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் மற்றும் அதற்கான திருத்தத்தின் மூலம் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த சட்டத்தில் சில விதிகளில் திருத்தம் செய்யப்படவேண்டும் என்று முஸ்லிம் சமூகம் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு செயல்பாட்டாளர்களினால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக திருமணம் செய்யப்பட வேண்டிய வயது, பதிவு செய்யும் நடைமுறை மற்றும் திருமணம் செய்தலுக்கான விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கு அமைவாக விதிகள் உள்ளிட்ட விடயங்களில் திருத்தத்தை மேற்கொண்டு அச்சட்டத்தை திருத்துவது தொடர்பில் அரசியலமைப்பு சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு சட்டவரைவு குழுவிடம் ஆலோசனை வழங்குவதற்காக, தபால் சேவை மற்றும் முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம், நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள ஆகியோர் இணைந்து  சமர்ப்பித்த கூட்டு யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது


Add new comment

Or log in with...