கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது | தினகரன்


கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ். காங்கேசந்துறை பகுதியில் 78 கிலோ 305 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – காங்கேசந்துறை வீதியில் 14ஆம் கட்டைக்கு அருகில் கஞ்சாவுடன் குறித்த சந்தேகநபர் நேற்று (24) மாலை கைது செய்யப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த காரொன்றை வழிமறித்துச்   சோதனைக்கு உட்படுத்தியபோது, அக்காரினுள் கஞ்சா இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதோடு, அக்காரினுள் பயணித்த சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி, அக்கராயன்குளம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சந்தேகநபரை, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

 


Add new comment

Or log in with...