Wednesday, April 17, 2024
Home » நற்பிட்டிமுனை முஸ்லிம்களின் வாழ்வியலும் வரலாறும் நூல் வெளியீட்டு விழா

நற்பிட்டிமுனை முஸ்லிம்களின் வாழ்வியலும் வரலாறும் நூல் வெளியீட்டு விழா

by Gayan Abeykoon
February 15, 2024 1:00 am 0 comment

நற்பிட்டிமுனை முஸ்லிம்களின் வாழ்வியலும் வரலாறும் நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை கல்முனை ஆஸாத் பிளாஸா கூட்ட மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கரைவாகு பிராந்தியத்தின் பழம்பெரும் கிராமமாக நற்பிட்டிமுனை விளங்குகின்றது.

இக்கிராமத்தின் பூர்வீகம், இங்கு வாழ்ந்த மக்களின் வாழ்வியல் மற்றும் கலை, கலாசார, அரசியல் பொருளாதார, விளையாட்டு மற்றும் கல்வி எனப் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு பல்வேறுபட்ட தேடல்களின் அடிப்படையில் நற்பிட்டிமுனை முஸ்லிம்களின் வாழ்வியலும் வரலாறும்” நூல் தொகுக்கப்பட்டு வெளியிடப்படவிருக்கிறது.

குறிப்பாக நற்பிட்டிமுனைக்கு பெயர் வந்த வரலாறு என்ற பகுதி பல்வேறுபட்ட ஆதாரத் தகவல்களுடன் வெளிக்காட்டி நிற்பதுடன் மறைக்கப்பட்ட மறந்து போன பல விடயங்களை ஆதாரங்களுடன் இந்நூல் தன்னகத்தே பொதித்து வைத்திருப்பது இதன் சிறப்பம்சமாகும்.

நற்பிட்டிமுனைக் கிராமம் பற்றி எதிர்காலச் சந்ததிக்கு இந்நூல் பல்வேறுபட்ட ஆதரத்தகவல்களை வழங்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை என நூலாக்கல் குழு அறிவித்துள்ளது.

மருதமுனை தினகரன் விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT