சீரற்ற காலநிலை; மத்தளவுக்கு திசை திருப்பப்பட்ட விமானம் | தினகரன்


சீரற்ற காலநிலை; மத்தளவுக்கு திசை திருப்பப்பட்ட விமானம்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானமொன்று, சீரற்ற காலநிலை காரணமாக மத்தள ராஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையத்தில் இன்று (21) காலை தரையிறக்கப்பட்டுள்ளதாக, மத்தள விமான நிலைய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் டெல்லியிலிருந்து 128 பயணிகளுடன் பயணித்த ஶ்ரீலங்கன் ஏயார் UL.-192 எனும் விமானமே மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானம் மத்தள விமான நிலையில் இன்று காலை 9.35 மணியளவில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...