பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்வதற்கான சாத்தியம் | தினகரன்


பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்வதற்கான சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில்(குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில்) மாலை வேளையில் இடியுடன் மழை பெய்வதற்கு சாத்தியம் அதிகரித்துக் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல்  1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் களுத்துறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும்

சில இடங்களில் 75 மில்லிமீற்றர்அளவான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்தோடு கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களை, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 


Add new comment

Or log in with...