நாட்டின் பாதுகாப்பு பலமாக உள்ளது; அச்சம் வேண்டாம் | தினகரன்


நாட்டின் பாதுகாப்பு பலமாக உள்ளது; அச்சம் வேண்டாம்

நாட்டின் பாதுகாப்பு சகல வழிகளிலும் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதனால் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக முன்னெடுக்கப்பட்டு வரும் போலிப் பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாமென ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன தெரிவித்தார்.

அரச நிறுவனங்கள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான அதிகபட்ச நடவடிக்கைகள் பாதுகாப்புத் துறையினரால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலையடுத்து அரசாங்க அலுவலகங்கள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பில் 2019 ஏப்ரல் 23 ஆம் திகதியன்று தன்னால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் மற்றும் அதனை தொடர்ந்து வெளியிடப்பட்ட ஏனைய கடிதங்களையும் சுற்றுநிருபங்களையும் மேற்கோள்காட்டி நாட்டில் மீண்டும் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக சிலர் பொதுமக்களையும் அரச நிறுவனங்களையும் அச்சுறுத்தி வருகின்றனர்.

நாட்டின் பாதுகாப்பு தற்போது பாதுகாக்கப்பட்டுள்ள நிலையில் இத் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என கூறியுள்ளார்.


Add new comment

Or log in with...