சஜித்துக்கான ஆதரவை வாபஸ் பெற்று முஸ்லிம் சமூகத்தின் வெற்றிக்காக பாடுபடுங்கள் | தினகரன்


சஜித்துக்கான ஆதரவை வாபஸ் பெற்று முஸ்லிம் சமூகத்தின் வெற்றிக்காக பாடுபடுங்கள்

அமைச்சர்கள் ஹகீம், ரிஷாட்டுக்கு ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்
இரண்டாவது தெரிவு வாக்கை வழங்கை ஜனாதிபதி தெரிவுக்கு நாம் உதவும்

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு வழங்கும் ஆதரவை உடனடியாக வாபஸ் பெற்று விட்டு முஸ்லிம் சமூகத்தின் வெற்றிக்காக பாடுபடுமாறு அமைச்சர்களான ஹக்கீம் றிசாட் ஆகியோருக்க வேண்டுகோள் விடுக்கின்றேன் என எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இன்றையதினம் (24) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இந்த தேர்தலில் நான் வாபஸ் பெறவேண்டும் என அமைச்சர் றிசாட் பதியுதீன்  கூறியுள்ளார். இந்த ஜனநாயக நாட்டிலே ஜனநாயகமாக ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கான உரிமை எனக்கு இருக்கின்றது.

சமூகத்தை மீண்டும் மீண்டும் கடந்த காலங்களைப் போல தோல்வியடையச் செய்யாமல் எனக்கு ஆதரவளித்து முஸ்லிம் சமூகத்தின் வெற்றியை உறுதிப் படுத்துமாறும் ஜனாதிபதியை தீர்மானிக்கின்ற சக்தியாக முஸ்லிம் சமூகத்தை மாற்றுவோம்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு வழங்கும் ஆதரவை உடனடியாக வாபஸ் பெற்று விட்டு எனது வெற்றிக்காக பாடுபடுங்கள் என சமூகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கின்றேன்.

அமைச்சர் ஹகீமும் ஏனைய அமைச்சர்களும் சமூகத்தை நான் காட்டிக் கொடுப்பதாக என் மீது குற்றம் சுமத்துகின்றார்கள். அவ்வாறு எந்தக் காட்டிக் கொடுப்புகளுமில்லை.

இது தொடர்;பாக தெளிவாக விவாதிப்பதற்கு நான் ரஊப் ஹக்கீமை அழைத்திருந்தேன். அவர் என் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கள் எல்லாம் அபாண்டங்களாகும். அப்பட்டமான பொய்யாகும். அதில் எந்த உண்மையும் கிடையாது. அதில் எதுவுமே இல்லை.  பொய்களையே அமைச்சர் ரஊப் ஹகீம் என் மீது சுமத்தினார்.

அது தொடர்பாக விவாதிப்பதற்கு வருமாறு ஏழு நாட்கள் அவகாசம் கொடுத்தேன். அவர்; அதனை ஏற்று வரவில்லை.  இதனால் ரஊப் ஹக்கீம் கூறியது பொய் என நிரூபனமாகியுள்ளது. ரஊப் ஹக்கீம்தான் முஸ்லிம் சமூகத்தைக் காட்டிக் கொடுக்கின்றாரே தவிர நான் முஸ்லிம் சமூகத்தைக் காட்டிக் கொடுக்கவில்லை.

இந்த தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50 வீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளை பெற முடியாது. ஆகவே நாங்கள் இந்த தேர்தல் களத்தில் நின்று இரண்டரை இலட்சம் வாக்குகளை பெறுகின்ற போது இரண்டாவது தெரிவு வாக்கை ஒருவருக்கு வழங்குவதனூடாக அவருக்கு அந்த இரண்டரை இலட்சம் வாக்குகளை கொடுத்து 51 வீதமாக மாற்றி அவரை வெற்றி பெறச் செய்வோம் சில வேளை அந்த வேட்பாளர் தோல்வியடைந்தாலும் மீண்டும் எமது வாக்குகளை கொடுத்து அவரை வெற்றி பெறச் செய்து ஜனாதிபதியாக்க வாய்ப்பு இருக்கின்றது.

ஆகவே  இந்த நாட்டில் நாங்கள் முஸ்லிம்கள் எனக்கு  இரண்டரை இலட்சத்துக்கு மேல் வாக்குகளை எனக்கு தந்தால் யாரும் ஜனாதிபதியை தீர்மானிக்க முடியாது. முஸ்லிம்கள் தான் ஜனாதிபதியை தீர்மானிப்பார்கள் அதனால் தான் ஜனாதிபதியை தீர்மானிக்கும் வேட்பாளர் எனக் கூறுகின்றோம் என மேலும் தெரிவித்தார்.

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன்)


Add new comment

Or log in with...