முஸ்லிம் தலைமைகள் எம்மை இனவாதிகளாக சித்தரிக்கின்றன | தினகரன்


முஸ்லிம் தலைமைகள் எம்மை இனவாதிகளாக சித்தரிக்கின்றன

அக்கரைப்பற்றில் நாமல் எம்.பி குற்றச்சாட்டு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவரது குடும்பத்தினரையும் இனவாதிகளென சில அரசியல் வாதிகள் மக்கள் மத்தியில் கூறி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை ஆதரித்து நேற்றுமுன்தினம் (22) மாலை அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இந்த அரசாங்கத்தில் சிறுபான்மை இன மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வந்தனர். குறிப்பாக முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம் அரசியல் தலைமைகள் இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவரது குடும்பத்தையும் இனவாதிகளென மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து வருகின்றார்கள்.

அபிவிருத்தியின் நாயகன் மஹிந்த ராஜபக்ஷவின் யுகத்தை மீண்டும் மலர செய்து நாட்டையும் வடக்கு, கிழக்கு மாகாணத்தையும் அபிவிருத்தி செய்வோம்.

2015ம் ஆண்டில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா மஹிந்தவின் திட்டத்தின் கீழ் பசில் ராஜபக்ஷ மூலம் இப் பிராந்தியத்தில் பாரிய அபிவிருத்திகளை செய்து காட்டியுள்ளார். அளுத்கம சம்பவத்தை வைத்து ஆட்சியை மாற்றினார்கள் .அதற்குப் பின்னால் இருந்தவர்கள் யார் என்று தெரியும்.

ஹக்கீம், றிஷாத் அரசாங்கத்துடன் இணைந்து 04 ஆண்டுகள் கடந்த நிலையில் எதனை மக்களுக்காக செய்தார்கள்.

அளுத்கம சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது, ஆனால் திகன விவகாரம் தொடர்பில் எந்த விசாரணையும் நடைபெறவில்லை. யாரும் கைது செய்யப்படவில்லை காரணம் அதில் தொடர்புபட்டவர்கள் இருப்பது நல்லாட்சி அரசாங்கத்தில் தான்.

தமிழ், சிங்கள யுத்தத்தை ஏற்படுத்தியவர்கள் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமே.

(ஒலுவில் விசேட, அம்பாறை சுழற்சி நிருபர்கள்)


Add new comment

Or log in with...