அடையாளத்தை உறுதிப்படுத்த தவறிய ஐவர் கைது | தினகரன்


அடையாளத்தை உறுதிப்படுத்த தவறிய ஐவர் கைது

03 இந்தியர், 02 இலங்கையர் ஜா-எலவில் கைது

இன்று (23) காலை ஜா-எல பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, அடையாளத்தை உறுதிப்படுத்தத் தவறிய 05 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜா-எல நகர சபைக்கு அருகில் இடப்பட்டுள்ள வீதித் தடைச் சோதனையில் சந்தேகத்திற்கிடமான வேனொன்றை பரிசோதித்தபோது, அதிலிருந்து அடையாளத்தை உறுதிப்படுத்தத் தவறிய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் மூன்று இந்தியர்கள் மற்றும் இரண்டு இலங்கையர்கள் அடங்குவதோடு, இலங்கையர் இருவர் மேற்கொண்ட  ஆரம்பக்கட்ட விசாரணையில், அவர்கள் யட்டியாந்தோட்டை மற்றும் மாத்தளை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக குறித்த வேன் மற்றும் கைதான சந்தேகநபர்கள்  ஜா-எல பொலிஸாரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

 


Add new comment

Or log in with...