மட்டக்களப்பு புகையிரத சேவைகள் தொடர்ந்து ஸ்தம்பிதம் | தினகரன்


மட்டக்களப்பு புகையிரத சேவைகள் தொடர்ந்து ஸ்தம்பிதம்

இன்றிரவு (23) திருகோணமலை மற்றும் மட்டக்களப்புக்கு பயணிக்கவிருந்த தபால் புகையிரத சேவை, பெரும்பாலும் இரத்துச் செய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதமொன்று அவுக்கண பகுதியில் தடம்புரண்டது.‘மீனகயா’ எனும் கடுகதி புகையிரதமே நேற்று முன்தினம் இரவு (21)  இவ்வாறு தடம்புரண்டது.

இதன் காரணமாக திருகோணமலை – மட்டக்களப்பு நோக்கிய புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

குறித்த புகையிரதத்தின் 06 பெட்டிகள் தடம்புரண்டதோடு, ஒருசில பெட்டிகள் மீள ஒழுங்கமைக்கப்பட்டு தடம்புரளாத பெட்டிகளுடன் அங்கிருந்து கொண்டுசெல்லப்பட்டுள்ளது. ஆயினும்,  தடம்புரண்ட ‘மீனகயா’ புகையிரத எஞ்சினை மீள தண்டவாளத்தில் இணைக்கும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இதன் காரணமாக இன்று (23) பிற்பகல் கொழும்பு புறக்கோட்டையிலிருந்து பொலன்னறுவை நோக்கி செல்லவிருந்த கடுகதி ரயில் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...