முல்லைத்தீவில் 2,300 கடல் அட்டைகளுடன் 12 பேர் கைது | தினகரன்


முல்லைத்தீவில் 2,300 கடல் அட்டைகளுடன் 12 பேர் கைது

முல்லைத்தீவில் 2,300 கடல் அட்டைகளுடன் 12 பேர் கைது-12 Arrested with 2300 Sea Cucumber

2,300 கடலட்டைகள்; 4 டிங்கி படகுகள் மீட்பு

சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை பிடித்த குற்றச்சாட்டில் 12 மீனவர்கள் முல்லைத்தீவு, புதுமாத்தளன் பகுதியில் கடற்படையினரால் நேற்று (22) கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுமாத்தளன் கடற்பகுதியில் கிழக்கு கடற்படை கட்டளைப் பிரிவினரும் முல்லைத்தீவு மீன்பிடித் திணைக்கள் உதவிப் பணிப்பாளர் அலுவலகப் பணியாளர்களும் இணைந்து நடத்திய சோதனையின்போது, குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவில் 2,300 கடல் அட்டைகளுடன் 12 பேர் கைது-12 Arrested with 2300 Sea Cucumber

கடல் அட்டைகளை பிடிப்பதற்கான உரிய அனுமதியின்றி கடல் அட்டைகளை பிடித்த குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.

இச்சந்தேகநபர்களிடமிருந்து 04 டிங்கி படகுகள், 04 இஞ்ஜின்கள் மற்றும் 2,300 கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.

குறித்த மீனவர்கள் கல்பிட்டி மற்றும் திருகோணமலையை சேர்ந்தவர்கள் என்பதோடு, 36 வயது 40 வயதுடையவர்கள் ஆவர்.

குறித்த மீனவர்களிடம், மேலதிக விசாரணை முல்லைத்தீவு மீன்பிடித் திணைக்கள உதவிப் பணிப்பாளர் அலுவலகத்தினரால் முன்னெடுக்கப்படுவதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.


Add new comment

Or log in with...