முரளிதரனை விவாதத்திற்கு அழைக்க திலகருக்கு அருகதையில்லை | தினகரன்


முரளிதரனை விவாதத்திற்கு அழைக்க திலகருக்கு அருகதையில்லை

முத்தையா முரளிதரன் அரசியல் சார்ந்த கருத்துக்களையும், சமூக வளர்ச்சி சம்பந்தமான கருத்துகளையும் முன்வைத்துவருகின்றார். இந்நிலையில் அவரை  விவாதத்திற்கு வருமாறு பாராளுமன்ற உறுப்பினர் திலகர் அழைத்துள்ளார். அவ்வாறு அழைப்பதற்கு திலகர் புரிந்துள்ள சாதனைகள் என்னவென? ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

எனக்கும் முத்தையா முரளிதரனுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாத போதிலும் இலங்கை வாழ் மக்கள் அனைவரும் பெருமைப்படும் அளவிற்கு கிரிக்கெட் வரலாற்றில் தலை சிறந்த சுழற்பந்து வீச்சாளராக அவர் உலக சாதனைப் படைத்துள்ளார். அவரின் கடின உழைப்பின் மூலம் இலங்கையை உலகளாவிய ரீதியில் பெருமைப்படுத்தியதில் முத்தையா முரளிதரனுக்கு முக்கிய பங்கு உள்ளது.

எனவே அவரை விவாதத்திற்கு அழைத்த திலகரை முரளிதரன் தன்னுடன் கிரிக்கெட் விளையாட அழைத்தால் திலகரின் நிலை என்னாகும்.

மக்களின் பிரச்சினைகளை பேசி தெளிவூட்டுவதை விடுத்து தாங்களின் சாதனைப் பூஜ்யம் என்பதால் சம்பந்தமற்ற கதைகளையும், ஆங்கிலத் தமிழ் மொழி மாற்றங்கள் பற்றியும் பேசி ஊடக நேரத்தை வீணடிக்கின்றார் திலகர் எம்.பி. தேர்தலுக்கும்,மக்கள் பிரச்சினைகளுக்கும் தொடர்பில்லாதவற்றை பேசிவருகின்றார்.

மக்கள் பிரச்சினைப் பற்றியோ அரசியலில் அடுத்தகட்ட நகர்வு பற்றியோ விவாதிக்காது  ஆங்கிலமுழுப் பதம் என்ன? தமிழ் மொழி மாற்றம் என்ன? என்று தொடர்பில்லாதவற்றை பேசி நேரத்தை வீணடிக்கும் வகையில் அவரின் செயற்பாடுகள் இருப்பதை அவதானிக்ககூடியதாக இருக்கின்றது. 

இவ்வாறான முட்டாள் தனமான கேள்விகளுக்கு பதிலளித்து நேரத்தை வீணாக்குவதை எதிராளி தவிர்த்துக் கொண்டால் தான் ஒரு அதிமேதாவி போல் ஏனையோர் மத்தியில் காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.  


Add new comment

Or log in with...