பாதுகாப்பை நடைமுறைப்படுத்த முப்படையினருக்கு அழைப்பு | தினகரன்

பாதுகாப்பை நடைமுறைப்படுத்த முப்படையினருக்கு அழைப்பு

பாதுகாப்பை நடைமுறைப்படுத்த முப்படையினருக்கு அழைப்பு-President Mathripala call out Armed Forces for the maintenance of Public Order

ஜனாதிபதியினால் அதி விசேட வர்த்தமானி வெளியீடு

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் பொதுமக்கள் பாதுகாப்பை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு  முப்படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

நேற்று (22) முதல் அமுலாகும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின்  40ஆம் அத்தியாயமான பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 12ஆம் பிரிவின் கீழ், ஜனாதிபதிக்குரித்தான தத்துவங்களின்அடிப்படையில், குறித்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 25 மாவட்டங்களிலும் பொதுமக்கள் பாதுகாப்பை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு தரைப்படை, கடற்படை, வான்படை ஆகிய முப்படைகளுக்கு இதன் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பை நடைமுறைப்படுத்த முப்படையினருக்கு அழைப்பு-President Mathripala call out Armed Forces for the maintenance of Public Order

பாதுகாப்பை நடைமுறைப்படுத்த முப்படையினருக்கு அழைப்பு-President Mathripala call out Armed Forces for the maintenance of Public Order

Add new comment

Or log in with...