தீபாவளிகள் வருகிறதுதான் ஆனால் சம்பந்தர் கூறும் தீர்வு எங்கே? | தினகரன்


தீபாவளிகள் வருகிறதுதான் ஆனால் சம்பந்தர் கூறும் தீர்வு எங்கே?

தீபாவளிகள் வருகிறதுதான் ஆனால் சம்பந்தர் கூறும் தீர்வு எங்கே?-Namal Rajapaksa at Akkaraipattu-Piyasena

அக்கரைப்பற்றில் நாமல் ராஜபக்ஷ கேள்வி

1983 முதல் சம்மந்தன் ஜயா தீபாவளியை காத்திருக்கின்றார். ஒரே கதை ஒரே பேச்சு ஒரே புகைப்படம் அவர் அன்றுமுதல் தீபாவளிக்கு முன்னர் தமிழ் மக்களுக்கான தீர்வு என்றே சொல்லியே காலத்தை கடத்தி வருகின்றார். வடகிழக்கு மக்களுக்கு இதுவரையில் அவ்வாறு எந்தவித நன்மையும் இதுவரையில் கிடைத்ததாக இல்லை என, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்திற்கு வருகை தந்த அவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச். பியனேவின் அழைப்பின் பேரில் அக்கரைப்பற்றிற்கு நேற்றிரவு (22) வருகை தந்த அவர், பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், தீபாவளிக்கு முன்னர் தீர்வு கிடைக்கும் என்றே தமிழ் மக்கள் நினைத்துள்ளனர். சம்மந்தன் ஜயாவிடம் மக்கள் இது தொடர்பில் கேட்டால் அப்படித்தான் சொல்கின்றார். இந்த ஆட்சியில் நான்காவது தீபாவளியும் கடந்து விட்டது. ஜந்தாவது தீபவாளிக்கும் அப்படி ஒரு ஒப்பந்தத்தை ஜக்கியதேசிய கட்சியுடன் செய்யபோவதாக நான் அறிகின்றேன்.

தீபாவளிகள் வருகிறதுதான் ஆனால் சம்பந்தர் கூறும் தீர்வு எங்கே?-Namal Rajapaksa at Akkaraipattu-Piyasena

சம்மந்தன் ஜயாவிடம் யாராவது தொழில் வாய்ப்பினையோ அல்லது பாதை அபிவிருத்தி தொடர்பாகவோ பேசினால் அது முடியாத காரியம் எனவும் அவ்வாறு பெற்றுத்தந்தால் அரசியல் தீர்வினை பெற முடியாது என கூறுவார்.

ஆனால் அவரும் கூட்டமைப்பில் உள்ள சுமந்திரன் உள்ளிட்டவர்களும் வாகனத்திற்கான பேமிட்டையும் மதுபான சாலைக்கான அனுமதியையும் அரசிடம் பெற்றுக்கொள்வர். மக்கள் நன்மை சார்ந்த விடயங்களை பெற்றுக்கொள்வதில்லை. இதனால் விசேடமாக கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் கிழக்கு மாகாணம் பற்றி அதிகம் பேசுவதில்லை என்றார்.

ஆகவேதான் சொல்லுகின்றேன். சிங்கள தமிழ் முஸ்லிம் பிரதேசங்களை அபிவிருத்தி செய்யக்கூடிய ஒரே தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் எமது வேட்பாளர் கோட்டாபயவுமே எனவும் குறிப்பிட்டார்.

இதன்போது உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேன, சின்னாபின்னமாக சென்று கொண்டிருக்கும் நமது நாட்டை பாதுகாக்க கூடிய தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெறிப்படுத்தலில் போட்டியிடும் கோட்டாபயவே என கூறினார்.

(காரைதீவு குறூப்நிருபர் சகா)


Add new comment

Or log in with...