கோட்டாவிற்கு வாக்களித்து வாக்கை வீணடிக்காதீர் | தினகரன்


கோட்டாவிற்கு வாக்களித்து வாக்கை வீணடிக்காதீர்

அமெரிக்க பிரஜையான கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு வாக்களித்து உங்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம் என சிவில் அமைப்புகளின் தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அமைப்பாளர் வன. தம்பர அமில தேரர் தெரிவித்தார்.     19 ஆவது திருத்தத்தின் பிரகாரம் வேறு நாட்டு பிரஜா உரிமையுள்ள ஒருவர் தேர்தலில் வெற்றி பெற்றாலும் தேர்தல் மனு ஒன்றினூடாக அதனை இரத்துச் செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.   

இந்த அரசில் இன ஒற்றுமை நல்லிணக்கம் என்பன உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  இதனை கோட்டாபயவினால் செய்ய முடியுமா?ஊடக நிறுவனங்களுக்கு தீவைத்த,தாஜூதீனை கொலை செய்த 27 கைதிகளை கொன்றவர்கள் யார் என்பது முழு நாட்டிற்கும் தெரியும். இவை தொடர்பில் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய எதுவும் செய்யவில்லை.  அவருக்கு எந்த தூரநோக்கு சிந்தனையும் கிடையாது.  அவருக்கு எதிராக பல வழக்குகள் நீதிமன்றங்களில் காணப்படுகின்றன. அவர் ஜனாதிபதியானால் அரச செலவில் தான் அமெரிக்காவில் தாக்கல் செய்துள்ள வழக்குகளுக்கு செல்வார்.    சஜித் பிரேமதாச தான் நாடுக்கு உகந்த தலைவராவார். அவரை தான் மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.  என்றார்.   

பேராசிரியர் சந்ரகுப்த தேநுவர கூறுகையில்,  

கோட்டாபயவின் பிரஜா உரிமை தொடர்பில் நாம் முன்வைத்த எந்த விடயத்தையும் நீதிமன்றம் தவறு என நிராகரிக்கவில்லை.  எமது நாட்டில் வசிப்பவருக்கு தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும்.  வழக்கு தீர்ப்பு வழங்கும் நாளில் தயாசிறி ஜெயசேகர என்னுடன் தொலைபேசியில் கதைத்தார். கோட்டாபயவிற்கு இரட்டை பிராஜாஉரிமை பெற்றுக் கொடுப்பதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளினூடாக மஹிந்த ராஜபக்‌ஷ இரு ஆவணங்களை வரவழைத்துக் கொண்டதாக என்னிடம் கூறினார். அது தொடர்பான பதிவுகள் எங்கும் கிடையாது. பதிவு, கோப்புகள் இல்லாத நாடுதான் இது. சட்டத்திற்கு உட்பட்டன்றி உறவினர்களின் தேவைக் ​கேற்பவே இவர்கள் ஆட்சி செய்தார்கள். கோட்டாபயவின் இரட்டை பிரஜாஉரிமையை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியவில்லை.  2003 இல் தான் அவர் இரட்டை பிரஜாஉரிமை பெற்றார். அமெரிக்க பிரஜா உரிமையை அவர் நீக்கிக் கொண்டதாக எந்த ஆவணமும் கிடையாது என்றும் அவர் கூறினார்.   

சிவில் அமைப்பு மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பு இணை அமைப்பாளர் சமன் ரத்னப்பிரிய கூறுகையில்  

தேர்தல் அறிவிக்கப்பட்டால் கட்சிகள் மட்டுமன்றி அமைப்புகளும் யோசனைகள் முன்வைக்கும்.  2015 தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இவ்வாறு யோசனை முன்வைத்தது.

நாம் மைத்திரிபால சிறிசேனவுக்கு யோசனை முன்வைத்து ஒப்பந்தமும் கைச்சாத்திட்டோம். இம்முறை தமிழ் கட்சிகள் முன்வைத்துள்ள யோசனைகளுக்கு உடன்படுவதாக இல்லை என அரசாங்கம் முடிவு செய்யும். அவர்களின் யோசனைகளை அரசு ஏற்றதாக பொய்க்குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது என்றார். (பா)    


Add new comment

Or log in with...