தேர்தலின் பின்னர் மக்களுக்கு மிஞ்சுவது வழமையான வறுமை வாழ்க்கையே | தினகரன்


தேர்தலின் பின்னர் மக்களுக்கு மிஞ்சுவது வழமையான வறுமை வாழ்க்கையே

மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளைக் கேட்கும் வேட்பாளர்கள் நவம்பர் 16ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தவுடன் தமது மாளிக்கைக்குள் நுழைந்து கொள்வார்கள். ஆனால் மக்களுக்கு மிஞ்சுவது வழமையான வறுமை மிகுந்த வாழ்க்கையாகும் என முன்னிலை சோஷலிச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் துமிந்த நாகமுவ தெரிவித்தார். 

கடவத்த நகரில் கடந்த 18ம் திகதி நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

‘நேர்மையான சமூகம்- இடதுசாரி வேட்பாளர்’ எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதித் தேர்தலுக்கு போட்டியிட முன்வந்துள்ளேன். தேர்தலொன்று வந்த பின்னர் தேர்தலுக்கு முன்னரே சமூக அணி திரள்வைவிட கிரமமாக மக்களின் தலைகள் மாறிவிடும் அதுதான் நாமறிந்த கசப்பான உண்மை. எழுபது வருடங்களாக நடைபெற்று வரும் விடயம். ஆனால் நாம் அவை அனைத்தும் நடைபெறும் வேளையில் சமூகத்தை விட சரியான அரசியல் திட்டமொன்றை வெற்றியடையச் செய்வதற்கு வழிகாட்டும் பொருட்டு முன்னிலை சோஷலிச கட்சிக்கு உள்ளதென எண்ணுகின்றேன்.

இங்கு வேலை செய்யும் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், மீனவர்கள், இளைஞர்களின் அரசியல் வாழ்க்கையை பலப்படுத்துவதற்காகத்தான் நாம் இத்தேர்தலில் போட்டியிடுகின்றோம். 

ஐ. தே. க. அங்கத்தவர்கள், சுதந்திரக்கட்சி அங்கத்தவர்கள், மொட்டுக்கட்சி அங்கத்தவர்கள், மக்கள் விடுதலை முன்னணி அங்கத்தவர்கள் பற்றி சிறிது எண்ணிப் பாருங்கள் நாம் இன்று மோசமான சமூகப் பாதிப்புக்குள்ளாகியுள்ளோம். தேர்தல் மேடைகளில் வெவ்வேறு நாடங்கள் அரங்கேறுகின்றன.  இவர்கள் அனைவரினதும் வாயிலிருந்து வெளிவருவது அபிவிருத்தியே. நாம் 71வருடங்களாக செய்யாத அபிவிருத்தியை வருகின்ற ஐந்து வருடத்தில் செய்து விடுவீர்களா என நாம் அவர்களிடம் கேட்கின்றோம். அதாவது ஐந்து வருடத்தில் நாட்டை உருவாக்கக் கூடிய மந்திரம் அவர்களிடமுள்ளது.

இம்மக்களுக்கு 70வருடங்களாக கூறிய பொய்யை இன்னும் ஐந்து வருடங்களுக்கு கூறப்போகின்றீர்களா? இவ்வாக்குறுதிகள் எல்லாம் நாட்டின் ஏழை மக்களின் ஏழ்மையை கொள்ளையடிக்கும் முயற்சியாகும். ஆனால் 16ஆம் திகதியின் பின்னர் அதிகாரத்துக்கு வந்தவுடன் இவர்களின் ஒருவரையாவது கண்டுபிடிக்க முடியாது. அவர்கள் அரச மாளிகைகளுக்குள் நுழைந்து விடுவார்கள்.

இந்நாட்டு மக்களுக்கு வழமையான வாழ்க்கையே வாழ வேண்டிய நிலைமை ஏற்படும். 16ம் திகதிக்குப் பின்னர் நாட்டு மக்களே தோல்வியடைவார்கள் அந்தத் தோல்வியை மாற்றுவதறகு நீண்டகால வெற்றிக்கு அடியெடுத்து வையுங்கள். அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளத்தான் முன்னிலை சோஷலிச கட்சி இத்தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளது.    


Add new comment

Or log in with...