Thursday, April 18, 2024
Home » புதிய கடற்றொழில் சட்ட வரைபு சபையில் விரைவில் சமர்ப்பிப்பு

புதிய கடற்றொழில் சட்ட வரைபு சபையில் விரைவில் சமர்ப்பிப்பு

மக்களை புரிய வைப்பது உதவி பணிப்பாளர்களின் பணி

by mahesh
February 14, 2024 6:30 am 0 comment

புதிய கடற்றொழில் சட்ட வரைபை கடற்றொழிலாளர் மத்தியில் பிரபல்யப்படுத்துவது மாவட்ட கடற்றொழில் உதவி பணிப்பாளர்களின் பொறுப்பென, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இச்சட்ட வரைபை கடற்றொழில் அமைச்சு விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நாடு முழுவதுமுள்ள கடற்றொழில் உதவிப் பணிப்பாளர்களுடன் நேற்று முன்தினம் (12) சூம் தொழில்நுட்பம் ஊடாக நடத்தப்பட்ட கலந்துரையாட லிலே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.இதில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:

நாட்டின் கடற்றொழில் துறையை சர்வதேச மட்டத்துக்கு மேம்படுத்த அமுலிலுள்ள சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும்.திருத்தப்பட்ட சட்ட வரைபு விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதனை கடற்றொழிலாளர்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களது கருத்துக்களையும் பெற வேண்டியுள்ளது. இதனால், நாட்டிலுள்ள 15 உதவி கடற்றொழில் பணிப்பாளர்கள் இவ்விடயத்தில் பொறுப்புடன் நடப்பது அவசியம்.எதிர்வரும் (19) கெழும்பில் 15 உதவிப் பணிப்பாளர்களை யும் சந்தித்து இவ்வரைபு தொடர்பில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவுஸ்திரேலியாவில் இந்திய ஊடகவியலாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியில், அரசாங்கம் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுப்பதற்கு கடும் நடவடிக்கை எடுத்துவருவதாக ஜனாதிபதி கூறியமை மிகவும் முக்கியமான விடயம்.தடைசெய்யப்பட்ட கடற்றொழில் உபகரணங்களின் பயன்பாட்டை தடுப்பதற்கு கடற்படையினர் நவடிக்கை எடுத்துவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT