களுவாஞ்சிக்குடி மெக்ஸ் விளையாட்டுக்கழகம் சம்பியன் | தினகரன்


களுவாஞ்சிக்குடி மெக்ஸ் விளையாட்டுக்கழகம் சம்பியன்

துறைநீலாவணைக் கிராமத்தின் சமூக முன்னோடிகளில் ஒருவரான அமரர்.வேலுப்பிள்ளை நாகேந்திரன் ஞாபகார்த்தமாக துறைநீலாவணை மத்திய விளையாட்டுக் கழகம் நடாத்திய மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி துறைநீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில், துறைநீலாவணை மத்திய விளையாட்டுக் கழகத் தலைவர் ச.அரங்கநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த இறுதிப் போட்டியின் களுவாஞ்சிக்குடி மெக்ஸ் விளையாட்டுக்கழகம், திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டுக்கழகம் என்பன விளையாடியதில் களுவாஞ்சிக்குடி மெக்ஸ் விளையாட்டுக்கழகம் அமரர் வேலுப்பிள்ளை நாகேந்திரன் நினைவுக்கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

கிழக்கு மாகாணத்திலுள்ள 64 முன்னணி விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றிய இந்த இறுதிச் சுற்றுப் போட்டியில் அதிதிகளாக அனுசரணை வழங்கிய அமரர்.வேலுப்பிள்ளை நாகேந்திரனின் துணைவியார் திருமதி.நேசமணி நாகேந்திரன் மற்றும் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.நகுலேஸ்வரன் புள்ளநாயகம், ஓய்வுபெற்ற விஞ்ஞானவள நிலைய பொறுப்பதிகாரி நா.புள்ளநாயகம் ஆகியோருடன் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் க.சரவணமுத்து ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் வெற்றி பெற்ற கழகங்களுக்கான வெற்றிக்கிண்ணம், பணப்பரிசு என்பவற்றை வழங்கி வைத்தனர்.

துறைநீலாவணை நிருபர்


Add new comment

Or log in with...