கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான சிறுவர் விளையாட்டு விழா | தினகரன்


கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான சிறுவர் விளையாட்டு விழா

அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கு 9 பதக்கங்கள்

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் நடாத்திய, பாடசாலை மட்ட சிறுவர் விளையாட்டு விழாவில், அக்கரைப்பற்று கல்வி வலயப் பாடசாலைகளின் சிறுவர் அணியினர் 04 தங்கம், 03 வெள்ளி, 02 வெண்கலம் என மொத்தம் 09 பதக்கங்களைப் பெற்று வெற்றியீட்டியுள்ளனர்.

அட்டாளைச்சேனை அஷ்ரஃப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில், கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தலைமையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற இவ்விளையாட்டு விழாவில் திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டப் பாடசாலைகளைச் சேர்ந்த மொத்தம் 459 பாடசாலைகளிலிருந்து சுமார் 06 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர்.

விளையாட்டு விழா அங்குரார்ப்பண நிகழ்வில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி.முதுபண்டா பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். யுனிசெப் பிரதிநிதி நிபால் அலாவுதீன், கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதி, உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோர் ஏனைய அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.

தரம் 03, 04, 05 யைச் சேர்ந்த ஆண், பெண், கலவன் சிறுவர் மெய்வல்லுநர்

குழுக்களைச் சேர்ந்த சிறுவர்கள், வேகமாகத் தடை தாண்டல், நின்ற நிலையில் நீளம் பாய்தல், குறுக்குப் பாய்ச்சல், தாம்பு தாண்டல், முழங்கால் ஊன்றி எறிதல், சுழன்று வீசுதல், கலப்பு ஓட்டம் ஆகிய 07 போட்டி நிகழ்வுகளில் பங்கேற்றனர். கிழக்கு மாகாண சிறுவர் விளையாட்டு விழாவில் பங்கேற்று, பதக்கங்கள் பெற்றுக் கொடுத்த மாணவர்கள், அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்கள்,

ஒத்துழைப்பு நல்கிய அதிபர்கள், மற்றும் பெற்றோருக்கு அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்-ஷெய்க் ஏ.எம்.றஹ்மத்துல்லாஹ், ஆரம்பக்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் எம்.ஏ.அபூதாஹிர், எஸ்.அம்ஜத்கான், அக்கரைப்பற்று கல்வி வலய பாடசாலை விளையாட்டு விருத்தி இணைப்பாளர் ஏ.எல்.பாயிஸ் ஆகியோர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். போட்டி முடிவுகள் பாடசாலை ரீதியாக வருமாறு,

 

அட்டாளைச்சேனை மத்திய நிருபர்


Add new comment

Or log in with...