அல்ட்ரா நைட், அல்ட்ரா வைட் வசதிகளுடன் Oppo Reno 2f | தினகரன்

அல்ட்ரா நைட், அல்ட்ரா வைட் வசதிகளுடன் Oppo Reno 2f

அல்ட்ரா நைட், அல்ட்ரா வைட் வசதிகளுடன் Oppo Reno 2f-Oppo Reno 2F launched with ultra night and ultra wide mode

OPPO தனது RENO 2f (ரெனோ 2f) மொபைல் போனை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது. RENO 2f ஆனது பயனர்களின் படைப்பாற்றலின் வரம்புகளை மீள்வரையறை செய்யும் OPPO வின் புதிய படைப்பாகும்.

இதன் குவாட் கெமரா தொகுதி,  48MP அல்ட்ரா கிளியர் பிரதான கெமரா, 8MP வைட் ஆங்கிள் லென்ஸ், 2MP மொனோ லென்ஸ் மற்றும் 2MP போர்ட்ரெய்ட் லென்ஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது. குவாட் கெமரா தொகுதியானது மிகத் தெளிவான இரவு காட்சிகளை பெறும் வகையிலான, குறிப்பாக ஒளி என்பதே இன்றிய வேளையிலான அல்ட்ரா கிளியர் இரவுக் காட்சிகளை (Ultra Clear night shots), மனித கண்களுக்கு கூட அறிய முடியாத விபரங்களை எடுக்கும் மிகத் தெளிவான இரவு காட்சிகளை பெறும் வகையிலான அல்ட்ரா டார்க் (Ultra Dark) வசதி உள்ளிட்ட புகைப்படங்களை மேம்படுத்தும் அம்சங்களையும், எவ்வித அதிர்வலைகளும் இன்றிய வீடியோக்களை பெறக்கூடிய, அல்ட்ரா ஸ்டெடி வீடியோ (Ultra Steady Video) வசதியையும் கொண்டுள்ளதுடன் விதிவிலக்கான மிகத் தெளிவான மற்றும் எவ்வித அதிர்வலைகளும் இன்றிய 'அக்ஷன் கெமரா' (action camera) போன்ற வீடியோக்களை பெறக்கூடிய, அல்ட்ரா ஸ்டெடி வீடியோ (Ultra Steady Video) வசதியையும் கொண்டுள்ளது. 

அல்ட்ரா நைட், அல்ட்ரா வைட் வசதிகளுடன் Oppo Reno 2f-Oppo Reno 2F launched with ultra night and ultra wide mode

வகையிலான அல்ட்ரா டார்க் (Ultra Dark) வசதி உள்ளிட்ட புகைப்படங்களை மேம்படுத்தும் அம்சங்களையும், எவ்வித அதிர்வலைகளும் இன்றிய வீடியோக்களை பெறக்கூடிய, அல்ட்ரா ஸ்டெடி வீடியோ (Ultra Steady Video) வசதியையும் கொண்டுள்ளதுடன் விதிவிலக்கான மிகத் தெளிவான மற்றும் எவ்வித அதிர்வலைகளும் இன்றிய 'அக்ஷன் கெமரா' (action camera) போன்ற வீடியோக்களை பெறக்கூடிய, அல்ட்ரா ஸ்டெடி வீடியோ (Ultra Steady Video) வசதியையும் கொண்டுள்ளது.

அல்ட்ரா நைட், அல்ட்ரா வைட் வசதிகளுடன் Oppo Reno 2f-Oppo Reno 2F launched with ultra night and ultra wide mode

OPPO இலங்கையின் தலைமை நிறைவேற்று அதிகாரி (CEO) பொப் லி தெரிவிக்கையில் "ரெனோ தொடரில் அதியுயர் ரக உணர்வு ஏற்கனவே காணப்படும் நிலையில், தற்போதைய மறு பதிப்பானது எங்கள் பயனர்களுக்கு இன்னும் ஆக்கபூர்வமான சாத்தியப்பாடுகளை உருவாக்குவதோடு, புதிய கண்ணோட்டங்களைக் கண்டறிய அவர்களுக்கு மேலும் அதிகாரத்தை அளிக்கிறது" என்றார். "அதன் மேம்பட்ட கெமரா தொழில்நுட்பம், பரந்த இடங்கள் முதல் குறுகிய பாதைகள் வரை அல்லது பிரகாசமான கடற்கரைகள் முதல் மங்கலான அமாவாசை இரவுகள் வரை பல்வேறு சூழல் நிலைகள் மற்றும் காட்சிகளின் போதும் சிறப்பாக செயல்படுகிறது" என தெரிவித்தார்

அல்ட்ரா நைட், அல்ட்ரா வைட் வசதிகளுடன் Oppo Reno 2f-Oppo Reno 2F launched with ultra night and ultra wide mode

முன்னேற்றகரமான கெமரா தொழில்நுட்பம் பயனர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்துகிறது
OPPO என்பது மொபைல்போன் புகைப்படப்பிடிப்பு எல்லைகளைத் தகர்க்கிறது.  RENO 2f  ஆனது நான்கு கமெராக்களை உள்ளடக்கி, அது முழு குவிவமைக்கப்பட்ட புகைப்பட தொகுதியை வழங்குவதோடு, அல்ட்ரா-வைட் கோணம் கொண்ட லென்ஸ் மற்றும் அல்ட்ரா நைட் பயன்முறை உடனான கெமரா தொகுதியைக் கொண்டுள்ளது... அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் ஆனது ஈர்க்கும் வகையிலான 119 பாகை கொண்ட புகைப்படத்தை வழங்க உதவுகிறது. அதன் மூலம் இன்னும் மாறுபட்ட படங்கள் மற்றும் புகைப்பட தீம்களை வெளிப்படுத்த முடிகிறது. பயனர்கள் இப்போது பரந்த, எல்லையற்ற நிலப்பரப்புகளை இரவு அல்லது பகல் என்ற வித்தியாசங்கள் இன்றி புகைப்படம் எடுக்கலாம் என்பதோடு நின்று விடாது, சிறிய அல்லது வரையறுக்கப்பட்ட இடைவெளிகளில் கூட அதனை மேற்கொள்ளலாம். இச்சாதனத்தின் விதிவிலக்கான செயல்திறன், பொருளில் அல்லது சூழலில் தங்கி இருக்காது என்பதை நிரூபிக்கின்றது.

அல்ட்ரா நைட், அல்ட்ரா வைட் வசதிகளுடன் Oppo Reno 2f-Oppo Reno 2F launched with ultra night and ultra wide mode

வில்லை மூலமான பட நிலைப்படுத்தல் (Optical Image Stabilization), F1.7 துளை (aperture) மற்றும் குவாட் பேயர் (Quad Bayer) தொழில்நுட்பத்துடன், ½ அங்குல உணர்த்தி (sensor) இணைக்கப்பட்ட 48 MP பிரதான லென்ஸுடன், Reno 2f இனால் குறைந்த வெளிச்சத்தில் சிறந்த செயல்திறனை அடைய முடிகின்றது. Reno 2f இனது அல்ட்ரா டார்க் பயன்முறையானது, சக்தி வாய்ந்த NPU, மற்றும் OPPO வின் நன்கு வடிவமைக்கப்பட்ட மாறுபட்ட வழிமுறைகள் (algorithms) ஊடாக வெவ்வேறு இரவு காட்சிகளின் முழு அம்சங்களையும் உள்ளடக்குகிறது. ஒளியின் அளவு 1 லக்ஸிற்கு (1 lux) இற்கு கீழ் காணப்பட்டாலும், ஹார்ட்வெயார் - நெட்வொர்க் இசைவாக்கத்துடனான AI (செயற்கை நுண்ணறிவு) மூலம்,  இடையீடுகளை குறைத்து (noise reduction), புகைப்படங்களை வெறும் கண்ணில் புலப்படும் தோற்றத்திற்கு அப்பாற்பட்ட தோற்றத்தை வழங்குகின்றது. இதேவேளை, உட்கட்டமைப்பில் நிறுவப்பட்டுள்ள NPU இன் உதவியுடன், பட உருவாக்க செயலாக்கத்தை விரைவுபடுத்தி மென்பொருள் மாற்ற வெளிப்பாட்டு சீராக்கம் (software dynamic exposure adjustments) உரிய பட பிரகாசத்தையும், இரவில் பொருட்களை வெளிப்படுத்துகையையும் உறுதிப்படுத்துகின்றது. வெற்றுக் கண்ணுக்கு இருளான வேளையில் புலப்படாத விடயங்களையும் தற்போது Reno 2f மூலம் பெறலாம். இரவில் மின்மினி பூச்சிகள், மெழுகு திரி ஒளியிலான இரவு விருந்துகள் உள்ளிட்ட அரிய பல காட்சிகளை பயனர்கள் தற்போது பெறலாம்.ஆனால் ஒரு புகைப்படத்தால் முழு கதையையும் சொல்ல முடியாது, அத்துடன் சமூகவலைத்தள பயனர்கள், தற்போது வீடியோக்களை பகிர்வது அதிகரித்துள்ளது. OPPO முன்னரை விட தற்போது வீடியோ பதிவு செய்வது தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. OPPO இன் தொழில்சார் முன்னணி அல்ட்ரா ஸ்டெடி வீடியோ தொழில்நுட்பம் ஆனது, வீடியோக்களின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துகவதோடு, பனிச்சறுக்கல், நீர்ச்சறுக்கல், சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட பல சந்தர்ப்பங்களில் பயனர்கள் அசைகின்ற வேளையின்போதும் நிலையான வீடியோக்களைப் பிடிக்க உதவுகிறது. இலத்திரனியல் பட உறுதிப்படுத்தல் மற்றும் வில்லை மூலமான பட உறுதிப்படுத்தல் ஆகியவற்றைக் கொண்ட உயர் மாதிரிப்டுத்தல் விகிதம் (sampling rate) மற்றும் ஹல் சென்சர் (hull sensor) கொண்ட IMU அளவிடும் சாதனம் மூலம் இது அடையப்படுகிறது. இவை பயனர்கள் எடுக்கும் நடுக்கத்துடனான காட்சிகளை மிகவும் துல்லியமாக ஈடுசெய்வதோடு, 60fps பிரேம் வீதம் (frame rate) நுட்பத்துடன் இணைந்து, பட உறுதிப்படுத்தல், சரளமாக்குதல் மற்றும் ஒட்டுமொத்த பட தரத்தையும் மேம்படுத்துதல் ஆகியவற்றை புரிகின்றன.

பயனர் மையப்படுத்திய வடிவமைப்பு நடைமுறை நாகரிகத்துடன் ஒருங்கிணைக்கிறது
Reno 2f ஆனது 6.5 அங்குல அமோலேட் பனோரமிக் (AMOLED Panoramic) திரை, 2340 x 1080 resolution மற்றும் 91.1% ஸ்கிரீன்-டு-பொடி ரேஷன் (screen-to-body ration) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது 5 ஆவது தலைமுறை கோர்னிங் ® கொரில்லா® கண்ணாடியினால் தயாரிக்கப்பட்டுள்ளது. சன்லைட் AMOLED (Sunlight AMOLED) திரை ஆனது பிரகாசமான வெளிப்புற சூழல்களில் கூட போதுமான பிரகாசத்தை வழங்குகின்றது. அதே நேரத்தில், திரையின் செயன்முறை ஆயுளை 50% ஈர’ நீடித்து, மின் நுகர்வினை 6% ஆல் குறைக்கிறது. Reno 2f ஆனது வளிமண்டல ஒளி இயல்பு (Atmosphere Light) உடனான 16MP வெளி வரக்கூடிய பொப்-அப் (pop-up) முன் கெமராவை கொண்டுள்ளது.

Reno 2f ஆனது தடையற்ற, ஒரே துண்டினாலான (one-piece) வளைந்த உடல் மற்றும் மூன்று-அடுக்கு பிரிப்பு தொழில்நுட்பத்தை கொண்டுள்ளதோடு, OPPO ஒரு பளபளப்பான, பல் வர்ண தோற்றத்தை பெற்றுள்ளது. இது வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு வண்ண மாற்றங்களை காட்டுகிறது. மாறுபட்ட மற்றும் மாறும் அழகியலின் இந்த உருவாக்கம் ரெனோ தொடருக்கு தனித்துவத்தை வழங்குகின்றது. இது தனிப் பண்புடைய, நிலையான வடிவமைப்பை வெளிப்படுத்ததுகின்றது. பின்புற கெமராக்கள் பின் மூடியின் கீழ் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. அவை நீடித்து நிலைக்கும் 5 ஆவது தலைமுறை கோர்னிங் ® கொரில்லா ® கண்ணாடியினால் தயாரிக்கப்பட்டுள்ளன.

அதிநவீன செயல்திறனை வழங்கும் கட்டிங் எட்ஜ் வன்பொருள் மற்றும் மென்பொருள்
Reno 2f ஆனது கலர்ஓஎஸ் 6.1 (ColorOS 6.1) இல் இயங்குகவதோடு, அது அன்ட்ரொய்ட் பை 9.0 (Android Pie 9.0) இன் அண்மைய பதிப்பில் இயங்குகிறது, இது எவ்வித தடையுமற்ற குதூகலமான பயனர் அனுபவத்தை வழங்குகின்றது. தொலைபேசியின் வெளிப்புற வடிவமைப்போடு பொருந்தக்கூடிய வால்பேப்பர் வடிவமைப்புகள் உள்ளிட்ட புத்தம் புதிய தோற்ற அனுபவத்தை வழங்குகிறது. முன்னர் பயன்படுத்தப்பட்ட, பெரிய வண்ண கட்டங்களுக்கு பதிலாக, மென்மையான, நேர்த்தியான மற்றும் எல்லையற்ற சாய்வு வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன, மேலும் இடையீடுகளை (navigation) நிர்வகிப்பதற்கான புதிய சைகைகள் (gestures) தொலைபேசியை ஒரே கையால் இயக்க வசதியாக அமைத்துள்ளன.

இந்த Reno 2F டச் பூஸ்ட் 2.0, ஃபிரேம் பூஸ்ட் 2.0 மற்றும் கேம் ஸ்பேஸ் (Touch Boost 2.0, Frame Boost 2.0, Game Space) போன்ற தேவையான அம்சங்களுடன் முழுமையான கேமிங் அனுபவத்தை வழங்குகிறது. டச் பூஸ்ட் 2.0 ஆனது பயனர்கள் மேம்பட்ட கேம்களை இயக்கும்போது ஏற்படும் பொதுவான சிக்கல்களைத் தவிர்க்க உதவுகின்றது. அதே நேரத்தில் ஃபிரேம் பூஸ்ட் 2.0 ஆனது மொபைல் செயல்திறனின் நிலையை பகுப்பாய்வு செய்வதன் மூலம் முதல் தர கேமிங் அனுபவத்திற்கு முன்னுரிமை அளிக்க பிரேம் வீதம் மற்றும் நிலைத்தன்மையை (frame rate, stability) சீராக்குகின்றது. மேலும் ஃபிரேம் பூஸ்ட் 2.0 ஆனது அதிக சக்தி நுகர்வு மற்றும் தொலைபேசி வெப்பமாவதைத் தவிர்ப்பதற்கான மூல வளங்களை ஒதுக்கும் செயற்பாட்டை மேற்கொள்கிறது. வேறென்ன வேண்டும், கேம் ஸ்பேஸ் ஆனது பயனர்களுக்கு கவனச்சிதறல் இல்லாத மற்றும் அதிவேக கேமிங் அனுபவத்தை வழங்க விளையாட்டு செயலிகளை ஒன்றிணைத்து நிர்வகிக்கிறது. ஒட்டுமொத்தமாக Reno 2F, சர்வதேச ரீதியிலான TUV Rheinland இனது ஐந்து நட்சத்திர கேமிங் செயல்திறன் சான்றிதழைக் கொண்டுள்ளது. அது திரையில் இருந்து தொலைபேசியின் ஒட்டுமொத்த கேமிங் செயல்திறன், மின்கல ஆயுள், சாதனத்தின் செயல்திறன் மற்றும் சமிக்ஞை வலிமை ஆகியவற்றை சோதனை செய்து இச்சான்றிதழை வழங்குகிறது.

மேலும், Reno 2F இன் உயர்தர திரை, டொல்பி அட்மோஸ்® மற்றும் ஹை-ரெஸ் (அதி சிறந்த) ஒலி நயம் ஆகியவற்றுடன் OPPO ஆனது வீடியோ உள்ளடக்க வெளிப்பாட்டில் அதிக கவனம் செலுத்தியிருக்கின்றது.

OPPO Reno 2F வேகமான மற்றும் பாதுகாப்பான VOOC விரைவான ஃப்ளாஷ் சார்ஜ் 3.0 தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இது புதிய VFC வழிமுறையைப் பயன்படுத்துகிறது. இது தந்திரோபாயமான வகையில் சார்ஜிங் வேகத்தை இரட்டிப்பாக்குவதன் மூலம் இறுதி 10% சார்ஜ் இற்கான நேரத்தை கணிசமாகக் குறைக்கிறது. VOOC ஃப்ளாஷ் சார்ஜ் 3.0 ஆனது Reno 2 சீரிஸ் ’4,000mAh (Typ) மின்கலத்துடன் இணைந்து பயனர்களுக்கு அதிக நேரம் நீடிக்கும் மின்கலத்தை வழங்குகிறது.

அல்ட்ரா நைட், அல்ட்ரா வைட் வசதிகளுடன் Oppo Reno 2f-Oppo Reno 2F launched with ultra night and ultra wide mode

இதன் விலை ரூபா. 74,990, ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதோடு, இயற்கையின் மயக்கும் அழகில்செல்வாக்கு செலுத்தும் OPPO Reno 2F ஆனது ‘ட்விலைட் மிஸ்ட்’ (‘Twilight Mist’) சீரமைப்புடனான ‘ஸ்கை வைட்’ மற்றும் ‘லேக் கிரீன்’ ஆகியவ இரண்டு வண்ணங்களில் கிடைக்கின்றன. அது மாத்திரமன்றி அண்மையில் சந்தையில் வெளியான OPPO A5 2020 இன் 3GB RAM கொண்ட பதிப்பு, ரூ. 34,990 எனும் விலையில் கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அல்ட்ரா நைட், அல்ட்ரா வைட் வசதிகளுடன் Oppo Reno 2f-Oppo Reno 2F launched with ultra night and ultra wide mode

OPPO பற்றி
வளர்ந்து வரும் உலகளாவிய ஸ்மார்ட்போன் நாமமான OPPO, கடந்த பத்து ஆண்டுகளாக நுகர்வோர் நடத்தை மற்றும் அபிலாஷைகளைப் பற்றிய ஆழமான நுண்ணறிவுக்கு ஏற்ப தொழில்நுட்ப முன்னேற்றங்களை மையமாகக் கொண்ட புதுமையான தொழில்நுட்பம், நுணுக்கமான வடிவமைப்பு மற்றும் கெமரா நிபுணத்துவம் ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அசாதாரண அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மொபைல் துறையில் சுழலும் கெமரா, அல்ட்ரா எச்டி அம்சம் மற்றும் 5 x டுவல் கெமரா Zoom தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை,  மொபைல் துறையில் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட பல ஸ்மார்ட் கண்டுபிடிப்புகளில் அறிமுகப்படுத்திய முதல் வர்த்தக நாமம் OPPO ஆகும்.
2016 ஆம் ஆண்டில் செல்பி-மையப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியதிலிருந்து, OPPO புதிய தொழில்நுட்பம் மற்றும் அதன் நுண்ணறிவு பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் அதன் எல்லைகளை விரிவுபடுத்துகிறது. அதன் பல மாதிரிகள் மற்றும் வரம்புகள் மூலம் ஏராளமான வடிவமைப்புகள் மூலம் நுகர்வோர் அனைவரையும் அவர்களிடம் உருவாகி வரும் அபிலாஷைகளை பூர்த்தி செய்கிறது.
200 மில்லியனுக்கும் அதிகமான நுகர்வோர் OPPO ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகின்றனர், OPPO இன் வர்த்தகம் 35 நாடுகளையும் பிராந்தியங்களையும் உள்ளடக்கியதாகும். 400,000 இற்கும் மேற்பட்ட காட்சியறைகளைக் கொண்டுள்ளதுடன் உலகளாவிய ரீதியில் 4 ஆராய்ச்சி மையங்களைக் கொண்டுள்ளது. அதன் மூலம் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு சிறந்த ஸ்மார்ட்போன் புகைப்பட அனுபவத்தை வழங்கி வருகிறது.

Add new comment

Or log in with...