ஒரு கிலோ ஹெரோயினுடன் வென்னவத்தை நபர் கைது | தினகரன்


ஒரு கிலோ ஹெரோயினுடன் வென்னவத்தை நபர் கைது

ஒரு கிலோ ஹெரோயினுடன் வென்னவத்தை நபர் கைது-Arrested with Heroin-Wennawatta Wellampitiya

சுமார் ஒரு கிலோ கிராமிற்கும் அதிக ஹெரோயின் போதைப்பொருளுடன் வெல்லம்பிட்டி, வென்னவத்தையைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றவியல் பிரிவு (CCD) அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, நேற்று (21) இரவு 9.20 மணியளவில் கொலன்னாவை பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்போது குறித்தநபரிடமிருந்து 1.1075 கிலோ கிராம் (ஒரு கிலோ 107 கிராம் 50 மில்லி கிராம்) ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான நபர், வென்னவத்தை, வெல்லம்பிட்டியவைச் சேர்ந்த 24 வயதான மொஹமட் சபீக் மொஹமட்ட சராஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை இன்றையதினம் (22) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Add new comment

Or log in with...