அந்தியோக்கியா நகர் புனித இக்னேஷியஸ் | தினகரன்


அந்தியோக்கியா நகர் புனித இக்னேஷியஸ்

அந்தியோக்கியா நகரை எருசலேம், உரோமை போன்ற கிறிஸ்தவர்களின் புனித நகரம் என்றால் மிகையாகாது.   

ஏரோது பெரிய யாகப்பரை வாளால் கொன்ற பின்பு இராயப்பரையும் சிறைப்பிடித்துத் துன்புறுத்தியது நாம்அறிந்ததே. ஏரோதின் வாரிசுகள் யூத மக்களால் விரும்பப்படவில்லை. எனவே தாம் யூதர்களுக்கு சார்பானவர்கள் என காட்டிகொள்ள கிறிஸ்தவர்களை வேட்டையாடினர். அதன் காரணமாக பன்னிருவர் உட்பட சிமர்கள் எருசலேமை விட்டுக் குடிபெயரத்ந்து சிரியா நாட்டில் குடியேறினர்.

இராயப்பர் கூட தம் தலைமைபை் பீடத்தை அந்தியோக்கியா நகரில் அமைத்துக் கொண்டார். அத்தோடு இயேசுவின் வழியில் சென்றவர்களை 'மார்க்கத்தினர்' என்று அழைத்தவர்கள், அவர்களை “கிறிஸ்தவர்கள்” என அழைத்ததுஅந்தியோக்கியாவில்தான். 

இந்த அந்தியோக்கியாவைச் சேர்ந்தவர்தான் இக்னேசியஸ் என்ற புனிதர்.

இவருக்கு “இறைவனைத் தாங்கி வந்தவர்' என்ற பெயரும் உண்டு. கி. பி. 108ம் ஆண்டு காலத்தில் இவர் உரோமையில் மறை சாட்சியாக மரித்தார்.

அவரை அந்தியோக்கியாவிலிருந்து உரோமைக்குக் கொண்டு செல்லும் வழியில் பல்வேறு நகர்களில் இருந்த சபைகளுக்கு மடல்கள் வரைந்தார். இவை பிற்காலத்தில் திருச்சபையின் இறையியலுக்கு மிக இன்றியமையாதவையாக தொடக்க கால தந்தையர்களின் போதனைகள் என இருந்துள்ளன.

இராயப்பருக்கு அடுத்தபடியாக வந்த முதலாம் கிளமன்ட் மற்றும் பொலிகார்ப்பு ஆகியோருடன் இவர் முக்கியமானவராகக் கருதப்படுகின்றார்.   தம் இள வயதிலேயே மனமாற்றம் அடைந்தார். என்றும் அவருடைய நண்பராகிய பொலிக்கார்புடன் இவர் புனித யோவானின் சீடராக இருந்தார் என்றும் பாரம்பரியம் கூறுகின்றது. இவரை அந்தியோக்கியாவின் ஆயராக நியமிக்க புனித இராயப்பரே முன்கூட்டி அறிவித்தார் என வரலாற்றாசிரியர் கூறுகின்றார். தம்மிடம் வந்த சிறு குழந்தைகளின் மீது கைவைத்து ஆண்டவர் ஆசீர்வதித்தார் அல்லவா அதில் உள்ள ஒரு குழந்தைதான் இக்னேசியஸ் என்ற வழக்கு இருக்கிறது.

ஆனால் பின்னர் கிடைத்துள்ள ஆதாரங்களின்படி இக்னேசியஸ் கி. பி. 50ம் ஆண்டுதான் பிறந்துள்ளார். பிற்காலத்தில் புனித ஜெரோம் கூற்றின்படி அவர் சிங்கங்களுக்கு இரையாக்கப்பட்டார் என்றும் பிறிதொரு கூற்றின்படி இது உரோமையின் கொலேசெயும் அரங்கத்தில் நிகழ்ந்தது என்றும் அறியமுடிகிறது.

இவரது உடலின் பாகங்கள் சேகரிக்கப்பட்டு அவர் பெயரால் உள்ள ஆலயத்தில் பேரரசர் தியோடோசியஷ் அவர்களால் வைக்கப்பட்டது. அதன் பின் 637ம் ஆண்டு முதல் உரோமையில் உள்ள பெஸிலிக்கா டி சென் கிலமன்ட் என்ற பேராலயத்தில் அது பாதுகாக்கப்பட்டு வருகின்றது.            


Add new comment

Or log in with...