தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்திய 6 மீனவர்கள் கைது | தினகரன்


தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்திய 6 மீனவர்கள் கைது

சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 06 மீனவர்கள், கொக்கிளாய் பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொக்கிளாய் கடற்பகுதியில் கிழக்கு கடற்படை கட்டளைப் பிரிவினர் வழமையான ரோந்து நடவடிக்கையில் நேற்று (21) ஈடுபட்டிருந்த போதே, குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த குற்றச்சாட்டிலேயே குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.

இச்சந்தேகநபர்கள் மணலாறு (வெலிஓயா), கொத்தாந்தீவு, கொக்கிளாய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, 25 வயது முதல் 51 வயதுடையவர்கள் ஆவர்.

இச்சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ள டிங்கி படகு, இஞ்ஜின், தடை செய்யப்பட்ட மீன்பிடி வலை ஆகியவற்றுடன் மேலதிக நடவடிக்கைகளுக்காக குச்சவெளி மீன்பிடித் திணைக்கள பரிசோதகரிடம் இச்சந்தேகநபர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.

 


Add new comment

Or log in with...