9 வன்முறைகள் உள்ளிட்ட 1,237 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு | தினகரன்


9 வன்முறைகள் உள்ளிட்ட 1,237 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு

24 மணித்தியாலத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக மொத்தமாக 103 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேசிய தேர்தல்கள் முறைப்பாட்டு மத்திய  நிலையம் மற்றும் மாவட்ட தேர்தல்கள் முறைப்பாட்டு விசாரணை நிலையம் ஆகியவற்றிற்கு நேற்றுமுன்தினம் (20) பிற்பகல் 4.00 மணியிலிருந்து நேற்று (21) பிற்பகல் 4.00 மணி வரையான காலப்பகுதியில் இம்முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

கடந்த 08ஆம் திகதி முதல் நேற்று வரை மொத்தமாக 1,237 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.   இதில் சட்டத்தை மீறியமை தொடர்பில் 1,184 முறைப்பாடுகளும் வன்முறைகள் தொடர்பில் 09 முறைப்பாடுகளும்  பதிவாகியுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...