வாக்காளர் அட்டை விநியோகத்திற்கு இரு விசேட தினங்கள் | தினகரன்


வாக்காளர் அட்டை விநியோகத்திற்கு இரு விசேட தினங்கள்

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைக்காகநவம்பர் 03 மற்றும் 10 ஆகிய இரு தினங்கள் விசேட விநியோக தினங்களாக அமுல்படுத்தப்படவுள்ளதாக, தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும், அவர்  தெரிவித்தார்.

எதிர்வரும் 31 மற்றும் நவம்பர் முதலாம் திகதிகளில் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்குப்பதிவு இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளது.  

அதனையடுத்து, அளிக்கப்பட்ட வாக்குகள் தெரிவத்தாட்சி அலுவலரிடம் மீள ஒப்படைப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாக, அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தபால்திணைக்களத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று தெரிவித்தார்.இதற்கமைய அனைத்து வாக்காளர்களுக்கும் உரிய நேரத்தில் வாக்காளர் அட்டைகள் பகிர்ந்தளிக்கப்படுமென்றும் அவர் கூறினார்.


Add new comment

Or log in with...