Friday, March 29, 2024
Home » CSK அணியுடன் இணைந்த கத்ரினா கைஃப்

CSK அணியுடன் இணைந்த கத்ரினா கைஃப்

- அணியின் விளம்பர தூதராக ஒப்பந்தம்

by Prashahini
February 14, 2024 10:34 am 0 comment

CSK விளம்பர தூதராக பிரபல பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

17ஆவது IPL T20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் மற்றும் மே மாதங்களில் நடத்தப்படவுள்ளது.

இப்போட்டியை அடுத்த மாதம் 22 ஆம் திகதி தொடங்கி மே இறுதி வரை நடத்த IPL நிர்வாகம் திட்டமிட்டிருப்பினும் உறுதியான திகதி அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்த முக்கியமான தகவல்கள் அடுத்தடுத்து வெளிவருகின்றன.

சமீபத்தில் CSK அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப் உரிமையைப் பெற்று தற்போது மற்றொரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.

அதாவது அணியின் பிராண்ட் அம்பாசிடராக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

எனவே, எதிர்வரும் சீசனில் CSK அணி வீரர்கள் பங்கேற்கும் அனைத்து விளம்பரங்களிலும் கத்ரினா கைஃப்பும் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோன்று போட்டிகளையும் நேரில் கண்டுகளித்து அணியை ஊக்கப்படுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT