யானைகளின் தொல்லை: பாதுகாப்பு வேலி அமைக்குமாறு மக்கள் கோரிக்கை | தினகரன்


யானைகளின் தொல்லை: பாதுகாப்பு வேலி அமைக்குமாறு மக்கள் கோரிக்கை

முல்லைத்தீவு சிறாட்குளம் கிராமத்தில் தொடரும் யானை தொல்லையால் அன்றாடம் பெரும் துன்பங்களை அனுபவித்து வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மிகவும் பின்தங்கிய பகுதியாகக் காணப்படும் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சிறாட்டிகுளம், உழுவன்நரி, எருவில் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன.

இவ்வாறு வாழ்ந்து வரும் குடும்பங்களில் ஜீவனோபாயமாக விவசாயமே காணப்படுகிறது. தற்போது குறித்த பகுதிகளில் காலபோக நெற்செய்கையும் அதனோடு இணைந்த சிறுதானிய செய்கை மற்றும் தோட்டச் செய்கை என்பன முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில் குறித்த கிராமங்களில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுகின்றது. அடர் காடுகளுக்கு மத்தியில் இவ்வாறு குறித்த கிராமங்கள் காணப்படுவதுடன் மேற்படி கிராமங்களை சூழவுள்ள காடுகளில் தொடரும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் காடழித்தல் என்பவற்றின் காரணமாக காடுகளில் இருந்த யானைகள் ஊர் மனைகளை நோக்கி வருவதாக இப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே தமது கிராமங்களை சூழ பாதுகாப்பு வேலி அமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பரந்தன் குறூப் நிருபர்   


Add new comment

Or log in with...