ரூ. 4 கோடி தங்கத்துடன் விமான நிலைய ஊழியர் கைது | தினகரன்


ரூ. 4 கோடி தங்கத்துடன் விமான நிலைய ஊழியர் கைது

தங்க பிஸ்கட்டுக்கள் மற்றும் தங்க ஆபரணங்களை விமான நிலையத்திலிருந்து கடத்தும் நோக்கில் மறைத்துவைத்திருந்த குற்றச்சாட்டில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வரி விலக்கு கடைத்தொகுதியில் (Duty free shop)பணியாற்றி வரும்ஊழியர் ஒருவர் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

40தங்க பிஸ்கட்டுக்கள் மற்றும் ஒரு கிலோகிராம் தங்க ஆபரணங்களுடனையே இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றின் பெறுமதி ரூ. 3.9 கோடி(39மில்லியன் ரூபா) எனவும் மதிப்பிடப்பட்டுள்ளதாகவும்,  சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர் தனது காலில் இவற்றை மறைத்து வைத்திருந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 


Add new comment

Or log in with...