களனி கேபல்ஸ் பிஎல்சிக்கு விசேட விருது | தினகரன்


களனி கேபல்ஸ் பிஎல்சிக்கு விசேட விருது

பாதுகாப்பான மின் மற்றும் தொடர்பாடல் வயர்கள் உற்பத்தியாளரான களனி கேபல்ஸ் பிஎல்சிக்கு, தேசிய தர விருதுகள் 2019நிகழ்வில் விசேட விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கட்டளைகள் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வு அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வின் பங்கேற்புடன் தாமரைத் தடாக அரங்கில் இடம்பெற்றது.

பிலிப்பைன்ஸில் இடம்பெற்ற 17ஆவது சர்வதேச வினைத்திறன் சிறப்பு விருதுகள் வழங்கும் நிகழ்வில் களனி கேபல்ஸ் பிஎல்சி, சர்வதேச வினைத்திறன் சிறப்பு உலகத் தர விருதை சுவீகரித்திருந்தமையை கெளரவிக்கும் வகையில் இந்த விசேட விருது வழங்கப்பட்டிருந்தது.  

தேசிய தர விருதை வெற்றியீட்டிய நிறுவனங்களுக்கு மாத்திரமே சர்வதேச வினைத்திறன் சிறப்பு உலகத் தர விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. 

தேசிய தர விருதுகள் 2016இல் போட்டியிட்டிருந்த சகல நிறுவனங்களிலிருந்தும் சர்வதேச வினைத்திறன் சிறப்பு உலகத் தர விருதுக்காக தெரிவு செய்யப்பட்டிருந்த ஒரே நிறுவனமாக களனி கேபல்ஸ் பிஎல்சி திகழ்கின்றது. 

உலகத் தர நியமங்களை தொடர்ச்சியாக பேணுவதற்கு தன்னை அர்ப்பணித்த நிறுவனமாக ஆசிய பசுபிக் பிராந்தியத்திலிருந்து சர்வதேச வினைத்திறன் சிறப்பு உலகத் தர விருதுக்கு களனி கேபல்ஸ் தெரிவு செய்யப்பட்டிருந்தது.  நிறுவனம் வெற்றியீட்டிய சர்வதேச வினைத்திறன் சிறப்பு உலகத் தர விருது பற்றி களனி கேபல்ஸ் பிஎல்சியின் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் அனில் முனசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “கடுமையான தர நியமங்கள் களனி கேபல்ஸ் பிஎல்சியின் முதுகெலும்பாக அமைந்துள்ளதுடன், வெற்றிகரமான செயற்பாட்டின் பின்புலமாகவும் காணப்படுகின்றது. இந்த விருதினூடாக, சர்வதேச ரீதியில் களனி கேபல்ஸ் நிறுவனத்துக்கு கெளரவம் கிடைத்துள்ளது.“ என்றார்.   களனி கேபல்ஸ் நிறுவனத்துக்கு தரச்சிறப்புக்கான ISO 9000:2008 சான்று, சிறந்த சூழல் முகாமைத்துவத்துக்கான ISO  14001:2004 தரச்சான்றும் வழங்கப்பட்டுள்ளன.


Add new comment

Or log in with...