மிரிஸ்ஸ Elysian Mirissa அடுக்கு மனை | தினகரன்


மிரிஸ்ஸ Elysian Mirissa அடுக்கு மனை

Elysian Realty Ltd நிறுவனத்தால் மிரிஸ்ஸ என்ற இடத்தில் இலங்கையின் கடல் முகப்பில் அமைந்துள்ள ஒரேயொரு ஆடம்பர அடுக்குமனைச் செயற்திட்டமாக இலைசியன் மிரிஸ்ஸ காணப்படுகிறது.  

மிரிஸ்ஸ கடல் முகப்பில் அமைந்துள்ள முதலாவது உயரமான கட்டடம் என்றவகையில், கடற்கரையிலிருந்து 25மீட்டர் தூரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

தொழிற்துறையில் நிபுணத்துவம் கொண்டுள்ள பல நிறுவனங்கள் இச்செயற் திட்டத்தில் கைகோர்த்துள்ளன. கட்டட வடிவமைப்பாளர்களாக ஆடைசழல Perera Associates, ஒப்பந்தகாரராக Weerasooriya Builders (Pvt) Ltd மற்றும் கட்டமைப்பு தரத்தின் மேற்பார்வையாளர்களாக Design & Structural Consortium ஆகிய நிறுவனங்கள் இணைந்துள்ளன. கட்டட மற்றும் வடிவமைப்பின் நேர்த்தியை உறுதி செய்யும் அதேசமயம், தரமான உறுதிப்படுத்தப்பட்ட வடிவமைப்பு மற்றும் செயல்பாட்டின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கு மூன்று தரப்புக்களும் ஒன்றாக உழைத்துள்ளன.  

Design and Structural Consortium நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான நுவான் சேனக வணிகரட்னவுடன் இந்த தனித்துவமான கடல் முகப்பு செயற்திட்டம் தொடர்பில் உரையாடும் போது கருத்து வெளியிடுகையில், இச் செயற்திட்டத்தின் கட்டமைப்பு வடிவமைப்பு பங்காளர்கள் என்றவகையில், ஆரம்பத்திலிருந்தே நாம் இதில் தீவிரமான ஈடுபாட்டைக் கொண்டுள்ளோம். மிக உகந்த கொங்கிரீட் மற்றும் வலுவூட்டல் ஆதாரத்தைப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதி நவீன கட்டமைப்பு மென்பொருள், கடற்கரையில் எழுப்பப்படும் மிகவுயரமான கட்டடங்கள் தொடர்பான ஆழமான அறிவு ஆகியவற்றைப் பயன்படுத்தி இதனை நிறைவேற்றியுள்ளோம், என்று குறிப்பிட்டார்.  

Elysian Mirissa செயற்திட்டத்தின் கட்டமைப்பு வடிவமைப்பானது சமுத்திரத்திற்கு மிகவும் நெருக்கமாக அமைந்துள்ளமையால் ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு, ஆபத்து மற்றும் பாதகமான காலநிலை என்பனவற்றை கவனத்தில் கொண்டதாக இக்கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.  

வணிகரட்ன அவர்களின் மேற்பார்வையின் கீழ் 2015 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட Design & Structural Consortium நிறுவனம், மொரட்டுவை பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூரின் Meinhardt Group ஆகியவற்றுடன் பங்குடமைகளை ஏற்படுத்தி, இலங்கையில் அதியுயர கட்டட நிர்மாணத்தில் முதலாவது ஸ்தானத்திலுள்ள கட்டமைப்பு வடிவமைப்புக்கான வர்த்தக நாமமாக வளர்ச்சி கண்டுள்ளது.  


Add new comment

Or log in with...