தீபாவளிக்கு கொழும்பில் சமர்ப்பணம் சேலைகள் | தினகரன்


தீபாவளிக்கு கொழும்பில் சமர்ப்பணம் சேலைகள்

சமர்ப்பணம் என்டர்டெயின்மன்ட் நிறுவனத்தின் சேலைகள் மற்றும் ஆபரண கண்காட்சி எதிர்வரும் அக்டோபர் 18ஆம் மற்றும் 19ஆம் திகதிகளில் கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயத்தின் மங்கையர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.  

சமர்ப்பணம் என்டர்டெயின்மன்ட் நிறுவனம் கொழும்பில் நடத்தும் இரண்டாவது கண்காட்சி இதுவாகும். கடந்த வருடமும் இது போன்ற கண்காட்சி ஒன்றை சமர்ப்பணம் என்டர்டெயின்மன்ட் நிறுவனம் கொழும்பில் நடத்தியிருந்தது. இதற்கு முன் அவுஸ்திரேலியாவிலும் நியு சிலாந்திலும் இரண்டு கண்காட்சிகளை சமர்ப்பணம் என்டர்டெயின்மன்ட் நிறுவனம் வெற்றிகரமாக நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

சமர்ப்பணம் என்டர்டெயின்மன்ட் நிறுவனத்தை ஆரம்பித்தவர் தற்போது அதன் நிர்வாகப் பணிப்பாளராக உள்ள மாலதி சிவேந்திரன். 12வருடங்களுக்கு முன் இந்தியாவின் சென்னையில் அவர் இந்த நிறுவனத்தை ஆரம்பித்தார். இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய ரீதியில் சிறப்பான பல கலை நிகழ்ச்சிகளை அவர் நடத்தியிருக்கிறார். இதற்கு அப்பால் அவருக்கு ஓவியம் மற்றும் வடிவமைப்பில் இருந்த ஆர்வமானது, அவரது நிறுவனத்தின் முத்திரைப் பெயரின் கீழ்் சேலைகள் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை அவருக்குள் ஏற்படுத்தியது.  

அவரது நிறுவனத்தின் முத்திரைப் பெயரின் கீழ்் உருவான சேலைகள் ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா. மற்றும் நியுசிலாந்தில் பல முறை கண்காட்சிகளில் இடம் பெற்றுள்ளன. இந்த தீபாவளியின்போது அக்டோபரில் அவரது சேலைக் கண்காட்சி கொழும்புக்கு வருகிறது. இக்கண்காட்சியில் அவர் தஞ்சாவுர் வடிவமைப்புடன் கூடிய நவீன மோஸ்தர்களினாலான சேலைகளை கொழும்்புக்கு கொண்டு வருகிறார். தஞ்சாவுரின் அழகு, ஆர்ப்பரிப்பு, ஓவியப் பண்பு ஆகியவை அவருக்க மிகவும் பிடித்தவை.  

இம்முறை கொழும்பு கண்காட்சிக்காக தனித் தன்மையுடன் உருவான சேலைகளை அவர் எடுத்து வருகிறார். அவர் கொண்டு வரும் லினன் சேலைகள் நுட்பமான வேலைப்பாட்டுடனும் மென் நிறங்களுடனும் எளிமையான வடிவமைப்புகளுடனும் அமைந்துள்ளன.  

நேர்த்தி என்பது ஒரு மனப்பாங்கு என்று மாலதி நம்புகிறார். ஒருவரின் நளினம் மற்றும் அழகினை வெளிப்படுத்தவும் சரியான மனப்பாங்கினை வழங்கவும் சேலைகள் உதவுகின்றன என்று அவர் கூறுகிறார். சேலை என்பது கலை வடிவமைப்புடன் கூடிய ஒரு ஆடை. அழகைச் சுற்றிய இன்னொரு அழகு. எனது சேலைகளை அணியும் பெண்கள் தாங்கள் அழகாகவும் நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாக உணர வேண்டும். நான் பல் வகைத் தன்மையை நம்புகிறேன். எனது வேலையை அது எப்போதுமே ஊக்குவித்துள்ளது என்று அவர் மேலும் கூறுகிறார்.  

சமர்ப்பணம் என்டர்டெயின்மன்ட் நிறுவனத்தின் ஆரம்பகர்த்தா மற்றும் பணிப்பாளர் மாலதி சிவேந்திரன் ஆவார். இந்த நிறுவனம் இந்தியாவிலும் மற்றும் உலகளாவிய ரீதியிலும் நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், ஆடை கண்காட்சிகள், மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. 12வருடங்களுக்கு முன் இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது முதல் பல பிரதேசங்களில் பல் வேறு சிறப்பான நிகழ்ச்சிகளை அவர் ஓயாமல் நடத்தி வந்திருக்கிறார்.  

கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயத்தின் (இந்து லேடீஸ் கல்லுாரி) பெருமை மிகு மாணவியான மாலதி அவரது மாணவ காலத்திலேயே ஆடை வடிவமைப்பில் இறங்கினார். அந்த வகையிலேயே சமர்ப்பணம் சேலைகளும் உருவாகின. சமர்ப்பணம் முத்திரை பல்வேறு அர்த்தமுள்ள கலை அமைப்புகளுடன் கூடியது. அவரது பயணங்கள், தஞ்சாவுர் கலையின் மீதான பிரேமை மற்றும் பாரம்பரியம் ஆகியவை அவரது வடிவமைப்பகளுக்கு உந்துசக்தியாக அமைகின்றன.  

எதிர்வரும் தீபாவளி பண்டிகையின் போது அவர் கொழும்பில் சேலைக் கண்காட்சியொன்றை நடத்தவிருக்கிறார். இந்தக கண்காட்சிக்காக அவர் கடந்த ஆறு மாத காலமாக தயாராகி வருகிறார். அத்துடன் கொழும்பில் அவர் நடத்தும் இரண்டாவது கண்காட்சி இதுவாகும்.  

இந்தியாவின கலை வடிவம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடும் நோக்கத்துடன் சமர்ப்பணம் சேலைகள் உருவாகியுள்ளன. அவற்றுக்கு வடிவமும் செயற்கூறும் நவீன ஈர்ப்பை சேர்க்கின்றன.


Add new comment

Or log in with...