திருமணத்திற்கு அவசரமில்லை | தினகரன்


திருமணத்திற்கு அவசரமில்லை

ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் பெட்ரோமெக்ஸ் படத்தில் நடித்துள்ள தமன்னா, இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேவி, தேவி 2ஆகிய படங்களுக்கு பிறகு நான் நடித்துள்ள பேய் கதை இது. வழக்கமாக மற்ற படங்களில் பேயை கண்டு மனிதர்கள் பயப்படுவார்கள். இதில் அதுவும் இருக்கும். அதைவிட, மனிதர்களை பார்த்து பேய்கள் பயப்படுவதையும் காட்டியிருக்கிறார்கள். 

சமீபகாலமாக ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட கதைகளில் நடித்து வருகிறேன். பெட்ரோமெக்ஸ் படம், என் சினிமா கெரியரில் வேறு லெவலில் இருக்கும். அடுத்து விஷாலுடன் அக்‌ஷன் படத்தில் நடித்துள்ளேன். இந்தி குயின் படம், தெலுங்கில் தட் இஸ் மகாலட்சுமி என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது.   இதில் நான் லீட் ரோலில் நடித்துள்ளேன். கோபிசந்த் ஜோடியாக நடிக்கும் படத்தில், கபடி கோச் வேடத்தில் நடிக்கிறேன். என் திருமணம் குறித்து நிறைய தகவல்கள் வெளியாகிறது. அதில் ஒரு சதவிகிதம் கூட உண்மை கிடையாது. சிலர் வேண்டுமென்றே கற்பனையாக எழுதுகிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்வது சரியாக இருக்காது என்று நினைக்கிறேன்.  

தினந்தோறும் அவர்கள் எழுதும் கற்பனை  கதையை என்னிடம் கொண்டு வந்து கொடுத்தால், அதை படமாக தயாரிக்க ரெடி. இப்போது என் திருமணத்துக்கு அவசரம் இல்லை. திருமணம் செய்துகொண்டே ஆக வேண்டும் என்று யாரும் என்னை வற்புறுத்தவில்லை. தொடர்ந்து சினிமாவில் முன்னணி இடத்தில் இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம். 


Add new comment

Or log in with...