தன் பிள்ளையை கர்ப்பமாக்கிய தந்தைக்கு விளக்கமறியல் | தினகரன்


தன் பிள்ளையை கர்ப்பமாக்கிய தந்தைக்கு விளக்கமறியல்

தன் பிள்ளையை கர்ப்பமாக்கி தந்தைக்கு விளக்கமறியல்-Mentally Ill Child Pregnant-Father Remanded-Kinniya

புத்தி சுவாதீனமற்ற மகளுக்கு நேர்ந்த கதி

தனது பிள்ளையை கர்ப்பமாக்கி பிள்ளையின் கற்பத்தை உடைத்ததாக தெரிவிக்கப்படும் சந்தேகநபரான தந்தைக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 39 வயதுடைய தந்தை ஒருவர் தனது 15 வயதுடைய புத்திக்கூர்மை குறைந்த மகளை கர்ப்பமாக்கிய சம்பவம் கிண்ணியா பொலிஸ் நிலையத்திற்கு தெரியவந்துள்ளது.

இம் முறைப்பாட்டையடுத்து கிண்ணியா பொலிஸ் பொறுப்பதிகாரி கபில கால்லகே  தலைமையில் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் தனது மகளை தந்தையே கர்ப்பமாக்கியமை தெரிய வந்துள்ளதுடன், 15 வயதான குறித்த பெண் பிள்ளையின் வயிற்றில் கர்ப்பம் தரித்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம். எச். எம். ஹம்ஸா முன்னிலையில் இன்றையதினம் (19) சந்தேகநபரை ஆஜர்படுத்திய போது, குறித்த சந்தேகநபரான தந்தையை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் , வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமி தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)


Add new comment

Or log in with...