உழவு இயந்திரம் - மோ. சைக்கிள் விபத்து; முதியவர் மரணம் | தினகரன்


உழவு இயந்திரம் - மோ. சைக்கிள் விபத்து; முதியவர் மரணம்

உழவு இயந்திரம் - மோ. சைக்கிள் விபத்து; முதியவர் மரணம்-Accident at Mannar Murikandy-70 Yr old Dead

வவுனியா, முறிகண்டியில் சம்பவம்

ஏ9 வீதி முறிகண்டிக்கு அண்மையில் உழவு இயந்திரத்துடன் மோட்டர் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ளார். 

கொக்காவில் சந்திக்கும் முருகண்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டத்தின் முன்னால் கண்டி - யாழ்ப்பாணம் வீதியின் 241 ஆம் கட்டை பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

உழவு இயந்திரம் - மோ. சைக்கிள் விபத்து; முதியவர் மரணம்-Accident at Mannar Murikandy-70 Yr old Dead

ஏ9 வீதி வழியாக கிளிநொச்சி நோக்கி, பெட்டி இணைக்கப்பட்டு சென்ற உழவு இயந்திரத்துடன், வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி அதே வீதி வழியாகச் சென்ற மோட்டர் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில்  மோட்டர் சைக்கிளில் பயணித்த, முதியவர் நெஞ்சுப்பகுதி பலமாக தாக்கப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

உழவு இயந்திரம் - மோ. சைக்கிள் விபத்து; முதியவர் மரணம்-Accident at Mannar Murikandy-70 Yr old Dead

கிளிநொச்சி, அம்பாள்நகர், திருவையாறு பிரதேசத்தைச் சேர்ந்த 79 வயதான ஆறுமுகம் சிறீஸ் கந்தராசா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த முதியவரின் உடலம் நோயாளர் காவு வண்டி மூலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதோடு, சடலம் தற்போது வைத்தியசாலையின் பிரேதஅறையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து குறித்து மாங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தரூபன்)


Add new comment

Or log in with...