சமாதானத்துடன் வாழக்கூடிய பாதுகாப்பான நாடு | தினகரன்


சமாதானத்துடன் வாழக்கூடிய பாதுகாப்பான நாடு

பாதுகாப்பு குறித்து அறிவோ தேவையோ இல்லாத அமைச்சரவை உள்ள நாட்டில் பாதுகாப்பு கிடைக்கும் என்று ஒருபோதும் கருத முடியாது என பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார். ஹொரன நகரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றிய அவர், 

நாட்டை பாதுகாக்குமாறே மக்கள் எம்மிடம் கேட்கிறார்கள். நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் நாம் தெளிவாக திட்டம் மேற்கொண்டிருந்தோம். தெளிவான புலனாய்வு சேவை இணைப்பை ஏற்படுத்தி பாதுகாப்பிற்கு நடவடிக்கை எடுத்தோம். ஆனால் 10வருடங்கள் கூட செல்ல முன்னர் இந்த அரசின் தூரநோக்கற்ற செயற்பாடுகளினால் ஆலயங்களில் குண்டு வெடித்தன. படைவீரர்களின் கௌரவம் இல்லாமல் போனது. புலனாய்வு பிரிவு செயலிழந்தது. தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை. இதனால் நாட்டின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்பட்டது.  

சமாதானத்துடன் வாழக்கூடிய பாதுகாப்பான நாடொன்றை நாம் கட்டியெழுப்புவோம். தெளிவான பொருளாதார திட்டத்துடனே நாம் ஆட்சிக்கு வருவோம். நாம் வழங்கும் வாக்குறுதிகளை அதே போன்று செயற்படுத்துவோம்.30வருட யுத்தத்தை குறுகிய காலத்தினுள் நிறைவு செய்தோம். பொருளாதாரத்தை பலப்படுத்தினோம். எம்முடன் திறமையான குழுவே உள்ளது.  

பொருட்களின் விலை உயர்வடைந்துள்ளது. முழுநாடும் வெளிநாட்டவர்களுக்கு விற்கப்படுகிறது. பிறக்காத குழந்தையும் கடன் சுமையுடனேயே பிறக்கிறது. 5வருடங்கள் ஆட்சிக்கு வரும் அரசிற்கு பிறக்க இருக்கும் பிள்ளைகளுக்குரிய சொத்துக்களை விற்கும் எந்த உரிமையும் கிடையாது.மக்களை நேசிக்கும் மக்களுக்கு சேவையாற்றக் கூடிய தலைவருக்கு வாக்களிக்குமாறு கோருகிறோம்.  

மக்கள் எம்முடன் இணைந்து வருகின்றனர். பிரதேச சபையையும் தமது தொகுதியையும் தோற்கப் போகும் ஒரே ஜனாதிபதியாக சஜித் பிரேமதாச என்பது உறுதியாகும் என்றும் அவர் கூறினார்.


Add new comment

Or log in with...