விவாதத்துக்கு ஹக்கீமை அழைப்பது நகைப்புக்குரியது | தினகரன்


விவாதத்துக்கு ஹக்கீமை அழைப்பது நகைப்புக்குரியது

அமைச்சர் ரவூப் ஹக்கீம் என்பவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி என்ற ஒரு பேரியக்கத்தின் தலைமை. அவரை ஒரு சாதாரண வேட்பாளராக உள்ள ஒருவர் பகிரங்க விவாதத்திற்கு அழைத்திருப்பது நகைப்பிற்குரிய விடயமாகவே பார்க்கின்றேன் என அம்பாறை மாவாட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 

ஜனாதிபதி வேட்பாளராக ஹிஸ்புல்லா களமிறங்கியிருப்பது முஸ்லிம் சமூகத்திற்கு பாரதூரமான நிலைமையை தோற்றுவிக்கக்கூடும். இவ் விடயத்தை விவாதிப்பதற்கு சாதாரண பொதுமகன் ஒருவரே போதும். அவரது காலத்திலிருந்து அரசியலில் களம் இறங்கியவன் என்ற வகையில் அவரோடு பகிரங்க விவாதத்திற்கு நான் தயாராகவே உள்ளேன்.  முஸ்லிம் சமூகத்தினர் தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என நன்கு விளங்கிக் கொண்ட ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தனது வெற்றிக்கு சவாலாக உள்ள சஜித் பிரேமதாசாவிற்கு வாக்குகள் செல்வதைத் தடுக்கும் மாற்று வழியாகவே முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவை ஒப்பந்தத்தின் அடிப்படையில் களமிறக்கியுள்ளார் என்றார். 

அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்  


Add new comment

Or log in with...