பிரெக்சிட் உடன்படிக்கை: அயர்லாந்தில் ஆர்ப்பாட்டம் | தினகரன்


பிரெக்சிட் உடன்படிக்கை: அயர்லாந்தில் ஆர்ப்பாட்டம்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு கண்டனம் தெரிவித்து வடக்கு அயர்லாந்து மக்கள் தீப்பந்தங்களுடன் போராட்டம் நடத்தினர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இந்த மாத இறுதிக்குள் பிரிட்டன் வெளியேறுவது உறுதியாகியுள்ளது. இதனால் பிரிட்டன் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு அயர்லாந்து மற்றும் பிரிட்டனிலிருந்து பிரிந்து தனி நாடாக உள்ள அயர்லாந்து குடியரசு இடையிலான எல்லைப் பிரச்சினை மீண்டும் உருவெடுக்கும் என அஞ்சப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதால் வடக்கு அயர்லாந்தின் வர்த்தகம், தொழில் மற்றும் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படும் என்று கூறி, வடக்கு லிபோர்ட் மற்றும் ஸ்ட்ரபனே பகுதி மக்கள் கடந்த புதன் இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தீப்பந்தங்களுடன் எல்லையோர பாலம் அருகே திரண்ட மக்கள், பிரிட்டன் ஒன்றியத்தை விட்டு வெளியேறக் கூடாது எனவும் இதனால் அங்கு வசிக்கும் பலதரப்பட்ட மக்களிடையே மீண்டும் பிளவு ஏற்படும் எனவும் கூறினர்.


Add new comment

Or log in with...