சிறுவர் ஆபாச இணையம் தொடர்பில் 337 பேர் கைது | தினகரன்


சிறுவர் ஆபாச இணையம் தொடர்பில் 337 பேர் கைது

சிறுவர்கள் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோக்கள் இடம்பெற்ற இணையதளத்தைப் பார்வையிட்ட 300க்கும் மேற்பட்ட பயனீட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அங்கு சுமார் 200,000 ஆபாச வீடியோ பதிவுகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அந்தக் வீடியோக்கள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட முறை பதவிறக்கம் செய்யப்பட்டன.

பிரிட்டிஷ் அதிகாரிகள் சிறுவர் பாலியல் குற்றவாளியைச் சோதனையிட்டதைத் தொடர்ந்து அது கடந்த ஆண்டு மூடப்பட்டது.

‘வெல்கம் டு வீடியோ’ எனும் அந்த இணையதளம் தென் கொரியாவிலிருந்து செயல்பட்டது. இணையப்பக்கத்தின் உரிமையாளரான 23 வயது ஜோங் வூ சொன் தற்போது அங்கு சிறை வைக்கப்பட்டுள்ளார்.

இதுவரை 38 நாடுகளைச் சேர்ந்த 337 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பிரிட்டன், அயர்லாந்து, அமெரிக்கா, தென் கொரியா, ஜெர்மனி, ஸ்பெயின், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், செக் குடியரசு மற்றும் கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...