15 ஆண்டுகளின் பின் கணவருடன் இணைந்தார் | தினகரன்


15 ஆண்டுகளின் பின் கணவருடன் இணைந்தார்

200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன் 15ஆண்டுகளுக்கு பின் தன் கணவர் கிருஷ்ணா வம்சியுடன் இணைந்துள்ளார். ரம்யா கிருஷ்ணன், கிருஷ்ணா வம்சி ரம்யா கிருஷ்ணன் 1983-ஆம் ஆண்டு வெளியான ’வெள்ளை மனசு’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 30ஆண்டுகளாகத் திரைத் துறையில் இருக்கும் ரம்யா கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளிலும் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 

கடந்த 2003-ம் ஆண்டு இயக்குனர் கிருஷ்ணா வம்சியை திருமணம் செய்து கொண்ட ரம்யா கிருஷ்ணன், திருமணத்திற்கு பின்னரும் படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் வெளியான பாகுபலி படத்தில் சிவகாமிதேவி வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தார். 

தற்போது இவர் நடிக்க உள்ள அடுத்த படத்தை அவரது கணவர் கிருஷ்ணா வம்சி இயக்க உள்ளார். ஏற்கனவே கிருஷ்ணா வம்சி இயக்கத்தில் சந்திரலேகா(1998), ஸ்ரீ ஆஞ்சநேயம்(2004) ஆகிய படங்களில் நடித்திருந்த ரம்யா கிருஷ்ணன், தற்போது 15ஆண்டுகள் கழித்து ’வந்தே மாதரம்’ படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

 


Add new comment

Or log in with...