திவுலபிட்டியவில் 30 கி.கி. ஹெரோயினுடன் மூவர் கைது | தினகரன்

திவுலபிட்டியவில் 30 கி.கி. ஹெரோயினுடன் மூவர் கைது

திவுலபிட்டியவில் 30 கி.கி. ஹெரோயினுடன் மூவர் கைது-Divulapitiya Heroin-3 Arrested

திவுலபிட்டிய பகுதியில் சுமார் 30 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் மூவர் இன்று (18) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.  

திவுலபிட்டியவில் 30 கி.கி. ஹெரோயினுடன் மூவர் கைது-Divulapitiya Heroin-3 Arrested

திவுலபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உல்எலபல, மில்காசில்வத்த பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் ஹெரோயின் விற்பனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து, குறித்த இடத்திற்கு சென்று சோதனை நடத்திய பொலிஸார், ஹெரோயின் போதைப்பொருளுடன் குறித்த சந்தேக நபர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர்.

திவுலபிட்டியவில் 30 கி.கி. ஹெரோயினுடன் மூவர் கைது-Divulapitiya Heroin-3 Arrested

இது தொடர்பாக பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

Add new comment

Or log in with...