பொ.ஜ.பெ. – இ.தொ.கா. புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து | தினகரன்


பொ.ஜ.பெ. – இ.தொ.கா. புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படுவதற்கான ஒப்பந்தமே இவ்வாறு கைச்சாத்தாகியுள்ளது.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு, இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று (18) காலை இடம்பெற்றது.

குறித்த ஒப்பந்தத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸூம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் அதன் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானும் கைச்சாத்திட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட இரு கட்சிகளினதும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


Add new comment

Or log in with...