Friday, April 19, 2024
Home » வெள்ள அனர்த்த காரணங்கள் ஆராய்வு

வெள்ள அனர்த்த காரணங்கள் ஆராய்வு

by mahesh
February 14, 2024 11:00 am 0 comment

அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஒலுவில், பாலமுனை, திராய்க்கேணி போன்ற பிரதேசங்கள் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பெரிதும் பாதிப்புக்குள்ளானது. இதற்கான காரணங்களை கண்டறிவதற்காக ஒலுவில் கலியோடை பாலம், ஆத்தியடிக்கட்டு, கோணவத்தை போன்ற பகுதிகளுக்கு நேற்று அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு இணைத்தலைவருமான ஏ.எல்.எம் அதாவுல்லாஹ் விஜயம் மேற்கொண்டிருந்தார். அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவர்த்தன, அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எச் பி. அனீஸ், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி அகமது ஷாபிர், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.ஏ.அன்சார், அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ. ரியாஸ் மற்றும் நீர்ப்பாசன பொறியியலாளர்கள், துறைசார்ந்த அதிகாரிகள் என பலரும் இவ்விஜயத்தில் கலந்துகொண்டனர்.

(திராய்க்கேணி தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT