கொழும்பின் சில பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு | தினகரன்


கொழும்பின் சில பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய பராமரிப்பு வேலை காரணமாக நீர்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 19ஆம் திகதி சனிக்கிழமை இரவு 9.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணி வரை நீர்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

கொழும்பு 13, 14, 15 உட்பட்ட  பகுதிகளிலேயே நீர்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது. அத்தோடு கோட்டை, புறக்கோட்டை மற்றும் கொழும்பு 09 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் எனவும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...