யாழ். சர்வதேச விமான நிலையம் திறந்துவைப்பு | தினகரன்


யாழ். சர்வதேச விமான நிலையம் திறந்துவைப்பு

யாழ். சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சந்து, வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் உள்ளிட்ட பலர் இதன் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை சிறப்பிக்க இந்திய பிரமுகர்கள் பலர் முதலாவது விமானத்தில் சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர். ATR72-600 விமானம் எயார் இந்தியா நிறுவனத்தின் சக நிறுவனமான அலையன்ஸ் எயார் நிறுவனத்துக்கு சொந்தமானது. இந்த விமான சேவையே அந்த நிறுவனத்தின் முதலாவது சர்வதேச சேவையாகும்.

2019  நவம்பர் முதல் சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான கிரமமான வர்த்தக விமான சேவைகள் ஆரம்பமாகும்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 


Add new comment

Or log in with...