அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் மூவர் கைது | தினகரன்


அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் மூவர் கைது

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் மூவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் வடக்கு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதே, குறித்த மீனவர்கள் மூவரும் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களிடமிருந்து ட்ரோலர் படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

வடக்கு கடற்படை கட்டளைப் பிரிவின் வேக தாக்குதல் கண்காணிப்பு படகின் மூலம் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின்போது,  வடமேல் திசையில் கோவிலம் கலங்கரை விளக்கத்தை அண்டிய கடற்பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

31, 34 வயதுகளையுடைய மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.

குறித்த மீனவர்கள் மூவரும் வைத்திய பரிசோதனையின் பின்னர், மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ். மீன்பிடித் திணைக்கள உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.

இலங்கையின் மீன் வளங்களைப் பாதுகாப்பதற்கான கடற்படையின் தொடர்ச்சியான முயற்சிகள்காரணமாக இவ்வாறான  சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க முடிந்துள்ளதாகவும், இதுபோன்ற நடவடிக்கைகள் தொடராவண்ணம்  தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டுவருவதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.  

 


Add new comment

Or log in with...