காத்தான்குடி வைத்தியசாலயில் 1,000 தடவைகள் குருதி சுத்திகரிப்பு | தினகரன்


காத்தான்குடி வைத்தியசாலயில் 1,000 தடவைகள் குருதி சுத்திகரிப்பு

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் குருதி சுத்திகரிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு ஆயிரம் தடவைகள்  குருதி சுத்திகரிப்பு நடவடிக்கையை மேற் கொள்ளப்பட்டமையை கொண்டாடும் வைபவம்  நேற்றுமுன்தினம் (15)  காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்றது. 

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ​டொக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர் ​தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் குருதி சுத்திகரிப்பு பிரிவின் வைத்திய அதிகாரி  ​டொக்டர் எம்.அஸ்ஹர் உட்பட வைத்தியர்கள் தாதியர்கள் குருதி சுத்திகரிப்பு பிரிவில் கடமையாற்றும் தாதியர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

இதன் போது ஆயிரம் தடவைகள் வெற்றிகரமாக குருதி சுத்திகரிப்பு நடவடிக்கையை மேற் கொள்ளப்பட்டமையையிட்டு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர் கேக் வெட்டினார். 

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கு மேற் கொள்ளப்பட்டு வரும் குருதி சுத்திகரிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு கடந்த 11 மாதங்களில் ஆயிரம் தடவைகள் குருதி சுத்திகரிப்பு மேற் கொள்ளப்பட்டுள்ளதாக ​​டொக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர் தெரிவித்தார். 

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்) 


Add new comment

Or log in with...