மாலையில் இடியுடன் மழை பெய்யும் சாத்தியம் | தினகரன்


மாலையில் இடியுடன் மழை பெய்யும் சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில்இடியுடன்  மழை பெய்வதற்கானசாத்தியம் அதிகரித்துக் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல்2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கானசாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில்மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் 75 - 100 மில்லிமீற்றர்அளவான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்தோடு சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே, மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களைவளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 


Add new comment

Or log in with...