25 வருடங்களை கடந்து வீறுநடைபோடும் The Adela Trading company | தினகரன்


25 வருடங்களை கடந்து வீறுநடைபோடும் The Adela Trading company

பூகோள மயமாக்கலின் பாதிப்பில் வியாபார உலகமும் மாற்றமடைந்தே உள்ளது. நம்பிக்கை, தரம் போட்டி தன்மையால் மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது. நம்பிக்கை, நாணயம், தரம் இத் தன்மைகளை தன் வியாபார தர்மங்களாக கடைபிடித்து 25 வருடங்கள் தாண்டி வீருநடை போடுகிறது தீ அடெலா ரேடிங்ஸ் கம்பனி. அடெலா ரேடிங் மூன்று கிளை நிறுவனங்களை கொண்டு இலங்கையில் தரத்தின் தன்னிகரில்லா சேவைகளை 25 வருடங்களாக தக்க வைத்திருக்கின்றது என்றால் அதற்கு சொந்தக்காரர் அந்நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.பி. சிவராஜ்தான் காரணம். இன்று பெரும் தொழிலதிபரான சிவராஜ சாதாரண மனிதர். ஹற்றன் புலியாவத்தை தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவர். தனது சாதாரண தர படிப்பை முடித்த பின்னர் 1983 ஆம் ஆண்டு ஜூலை கலவர உக்கிரத்தில் கொழும்புக்கு வேலைக்கு வந்தவர்.

முதலில் போல்ட் என் நட் (bolds n nuts) வாங்கி விற்க தொடங்கிய சிவராஜ் சிறுக சிறுக தனி ஆளாக மெசன்ஜர் வீதியில் ஒரு கடையை கூலிக்கு வாங்கி 1993 ஆம் ஆண்டு வியாபாரத்தை ஆரம்பித்துள்ளார். சிறுக சிறுக உழைத்து இந்த அடெலா என்ற விருச்சத்தை நிலைநிறுத்தியுள்ளார்.

இன்று இவரின் மூன்று நிறுவனங்களில் (Safety Items, Own Manufacture, Hardware Items, Bolts and Nuts) 150 பேர் வரை வேலை செய்கிறார்கள். சுமார் 150 குடும்பங்களை வாழவைத்து கொண்டிருக்கிறார்.


Add new comment

Or log in with...