Friday, March 29, 2024
Home » பரீட்சை வினாத்தாளில் “ஒரு நாடு இரு தேசம்” என்ற வினாவால் சர்ச்சை

பரீட்சை வினாத்தாளில் “ஒரு நாடு இரு தேசம்” என்ற வினாவால் சர்ச்சை

- கேள்வி தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பு

by Prashahini
February 13, 2024 2:05 pm 0 comment

வடமாகாண கல்வி திணைக்களத்தால் , 11ஆம் ஆண்டு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட 3 ஆம் தவணை தமிழ் மொழியும் இலக்கியமும் பரீட்சையில் , கேட்கப்பட்ட கேள்வி ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“ஒரு நாடு இரு தேசம்” என தமிழர்கள் முழங்கினர். இவ்வாக்கியம் என்ன வாக்கியம் என்ற கேள்வியே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதுடன் ,அது தொடர்பிலான விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இதேவேளை குறித்த கேள்வி தொடர்பில் ,பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் அறிய முடிகிறது.

“ஒரு நாடு இரு தேசம்” எனும் சொல் தமிழ் அரசியல் கட்சி ஒன்று தமது கொள்கையாக கொண்டுள்ள நிலையில் அது தொடர்பிலான வினாத்தாளில் வந்தமையே சர்ச்சைக்கு காரணமாகும்.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT