யாழ். குடிநீர் பிரச்சினைக்கு 'யாழ்ப்பாணத்திற்கு நதி' திட்டம் | தினகரன்


யாழ். குடிநீர் பிரச்சினைக்கு 'யாழ்ப்பாணத்திற்கு நதி' திட்டம்

யாழ். தீவகத்தின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் நவடிக்கை மேற்கொண்டுள்ளது. வருடத்தில் பாவனைக்கான தண்ணீர் தேவையை 8 கன மீற்றராக அதிகரிக்கும் வகையில் யாழ்ப்பாணத்திற்கு நதி என்ற பெயரில் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பில் அமைச்சரவையில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அது குறித்த விபரம் பின்வருமாறு:

யாழ்.தீவகத்தில் நதி இல்லாமை அங்கு நீர் தட்டுப்பாட்டை தவிர்த்தல் மற்றும் வடமராட்சி களப்பிற்கு எல்லையில் உள்ள கிணற்று நீரின் உவர்ப்புத் தன்மையைக் குறைத்தல், அந்த பிரதேச விவசாய நடவடிக்கைளுக்கான நீர் விநியோகத்தை ஒரு வருடத்திற்கான 8 மில்லியன் கனமீற்றர் அளவில் அதிகரித்தல், நன்னீர் கிடைக்கும் தன்மையை ஏற்படுத்துவதன் மூலம் குடிநீர் மற்றும் வீட்டுத் தேவைக்கான நீரை வழங்குவதை அதிகரிக்கும் நோக்குடனான 2 கட்டங்களைக் கொண்ட 5 வருட திட்டமாக யாழ்ப்பாணயட்ட கங்ஹக் - யாழ்ப்பாணத்திற்கு நதி என்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படாத 12,610 ஹெக்டயர் மற்றும் நெல் புற்தரையுடன் 1,315 ஹெக்டயர் நிலப்பரப்பை அபிவிருத்தி செய்வதற்கும் அதன் மூலம் நிவாரணம் வழங்கப்படுவதுடன் 300,000 இற்கும் மேற்பட்ட பொது மக்கள் நன்மையடைவார்கள். இதற்கமைவாக இந்த திட்டம் 3,609 மில்லியன் ரூபா நிதியின் மூலம் நடைறைப்படுத்துவதற்காக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


Add new comment

Or log in with...